கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு முன்பாக 53 வயதுடைய ஆண் ஒருவர் சற்று முன்னர் தற்கொலை…!

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு முன்பாக 53 வயதுடைய ஆண் ஒருவர் சற்று முன்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின்வெட்டை உடனடியாக நிறுத்தக் கோரி, அந்த நபர் மின்மாற்றியில் ஏறியதாகவும் பின்னர் கீழே விழுந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. Read more »

வடமராட்சி கிழக்கு மக்களுக்கு இரண்டாவது தடவையாக துரோகமிழைத்த அரியகுமார்….!

பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அ. அரியகிமார் இரண்டு தடவை வடமராட்சி கிழக்கு மக்களை ஏமாற்றியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைக்கப்படுகின்ற கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை எதிர்ப்பதற்க்கென உருவாக்கப்பட்ட வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி... Read more »

கிளிநொச்சியில் எரிபொருள் பெற்றுக் கொள்ள நீண்ட வரிசை…..!

கிளிநொச்சியில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படும் அதேவேளை, எரிபொருள் பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையும் காணப்படுகின்றது. வைத்தியசாலை சேவை உட்பட அத்தியாவசிய சேவைகள் வழமைபோல் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதுடன், பொது போக்குவரத்துக்களும் இடம்பெறவில்லை Read more »

இலங்கையில் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டமைக்கான காரணம் அறிவிப்பு

பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய சமூக ஊடக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. நாட்டின் முக்கிய சமூக ஊடகங்கள் நேற்று நள்ளிரவு முதல் முடக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால் பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம்,... Read more »

யாழ் மாநகர சபை உறுப்பினரின் முன்மாதிரியான செயற்பாடு! –

நாட்டில் நிலவும் மின்சாரத் தடை நேரத்திலும் ஒளியைத் தேடும் நோக்கில் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் ந.லோகதயாளனால்  அரிக்கன் லாம்பு வழங்கி வைக்கப்பட்டது. 18/03/2022 அன்று   கனடா மார்க்கம்  பகுதியில்  இறைபதம் அடைந்த அமரர் கிருஸ்ணகுமார் கிருஸ்ணரட்ணம் நினைவாக,  அவரது  பள்ளித்தோழர்களான தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரி(... Read more »

ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி! –

இராஜதந்திர பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் தமது வழமையான செயற்பாடுகளை இன்றைய தினம் முன்னெடுக்க முடியும் என சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.அவர்கள் தமது பணியிட அடையாள அட்டையை பயன்படுத்தி ஊரடங்கு சட்ட காலத்தில் பயணிக்க முடியும் என அவர்... Read more »

க.பொ.த உயர்தர பரீட்சை குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு! –

2022 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை எதிர்வரும் ஒக்டோபரில் நடத்துவதற்கும், டிசம்பரில் இடம்பெற வேண்டிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளை 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எஸ்.பிரணவதாசன்... Read more »

சமூக ஆர்வலர் திசர அனுருத்த பண்டாரவுக்கு பிணை! –

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் திசர அனுருத்த பண்டார பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.சமூக ஊடக ஆர்வலரும் பல்கலைக்கழக மாணவருமான திசர அனுருத்த பண்டார கம்பளை முட்டுவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி செய்திகளை வெளியிட்டு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியதாக 28 வயது சமூக... Read more »

தலை பிறை தென்பட்டது: இன்று முதல் நோன்பு ஆரம்பம்.

ஹிஜ்ரி-1443 புனித ரமழான் மாதத்திற்கான தலைபிறை தென்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு அறிவித்துள்ளது.இதன்படி, இன்று அதிகாலை முதல் நோன்பை கடைப்பிடிக்குமாறு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது Read more »

ஊரடங்கு உத்தரவை மீறிய 664 பேர் கைது! –

நாட்டில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை வரை ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாட்டில் நேற்று மாலை 6 மணி முதல் நாளை அதிகாலை 6 மணி... Read more »