வடமராட்சி கிழக்கு மக்களுக்கு இரண்டாவது தடவையாக துரோகமிழைத்த அரியகுமார்….!

பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அ. அரியகிமார் இரண்டு தடவை வடமராட்சி கிழக்கு மக்களை ஏமாற்றியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைக்கப்படுகின்ற கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை எதிர்ப்பதற்க்கென உருவாக்கப்பட்ட வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி அமைப்பு எனும் அமைப்பை உருவாக்கி அதற்கு எதிராக ஒருநாளேனும் குரல் கொடுக்காது அதனை பயன்படுத்தி அரசியலிற்க்கு வந்து பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் ஆகியமை, வகை தொகை இன்றி மணல் அள்ளிச் செல்லப்பட்ட வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் மீண்டும் அரசு சார்பான மணல் அகழ்வாளர்களுக்காக வீதியை பயன்படுத்தி மணல் அகழ்வை மேற்கொள்ள தனது உறுப்பினர்களை ஆதரவாக வாக்களிக்க வைத்து வீதியை பயன்படுத்த இரட்டை வேடமிட்டமை  என்பன இவை இரண்டுமாகுமென மக்கள் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews