ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி! –

இராஜதந்திர பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் தமது வழமையான செயற்பாடுகளை இன்றைய தினம் முன்னெடுக்க முடியும் என சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அவர்கள் தமது பணியிட அடையாள அட்டையை பயன்படுத்தி ஊரடங்கு சட்ட காலத்தில் பயணிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் நேற்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, நேற்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews