உகத தமிழர் தேசிய பேரவையால் சமைத்த உணவு வழங்கிவைப்பு.

உலக தமிழர் தேசிய பேரவையால் கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில்  நேற்றைய தினம் மதியம் மற்றும் இரவும் 257 பேருக்கு சமைத்த உணவு வழஙகி வைக்கப்பட்டுள்ளது. சுண்ணாகம் பகுதியில் உள்ள இடம் நீதவான்  நலன்புரி முகாம், உரும்பிராயில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், மற்றும் உரும்பிராய் ... Read more »

தமிழ் மக்களுக்குள்ளேயும் இருக்கின்ற நரகாசுர்களை அழிப்பதற்கும் இந்நாளில் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரசியல் ஆய்வாளர் சி.அ.ஜோதிலிங்கம்.

இந்த நன்நாளில் தமிழ் மக்களுக்குள்ளேயும் இருக்கின்ற நரகாசுர்களை அழிப்பதற்கும் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என அரசியல் ஆய்வாளர்  சி.அ.ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார். தீப ஒளித் திருநாளா இன்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது Read more »

சர்வதேச நீதிமன்றத்திடம் இருந்து இலங்கையை காப்பாற்றவே எம்.ஏ.சுமந்திரன் அமெரிக்கா பயணிப்பதாக குற்றச்சாட்டு….

சர்வதேச நீதிமன்றத்திடம் இருந்து இலங்கையை காப்பாற்றவே, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அமெரிக்கா பயணிப்பதாக, வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜ் இன் 15 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு,... Read more »

கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச சபை அமர்வு, தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில், இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பமானது. சபை ஆரம்பித்ததும், 2022 ஆம் ஆண்டுக்கான வரவு... Read more »

திண்ணைச் சந்திப்பு….. ஆய்வாளர் நிலாந்தன்.

கடந்த செவ்வாய்க்கிழமை யாழ் திருநெல்வேலியில் அமைந்துள்ள திண்ணை உல்லாசவிடுதியில் 7 கட்சிகள் கூடின.13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுப்பது அச்சந்திப்பில் நோக்கமாக இருந்தது.தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதில் அழைக்கப்படவில்லை. தமிழரசுக் கட்சி அழைக்கப்பட்ட போதிலும் பங்குபற்றவில்லை.மனோ கணேசனும் ரவுப் ஹக்கீமும்... Read more »

இலங்கை மீன்பிடி படகு ஒன்று 13 மீனவர்களுடன் மாலைதீவில் கரை ஒதுங்கியுள்ளது!

இலங்கை மீன்பிடிப் படகு ஒன்று 13 மீனவர்களுடன் மாலைதீவில் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் இருந்து மீனபிடிக்கப்பட்ட ஓர் படகே இவ்வாறு மாலைதீவில் கரை ஒதுங்கியுள்ளதாக சுட்டிக் காட்டப்படுகின்றது. இவ்வாறு இலங்கை மீனவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றபோதும் படகு எங்கிருந்து புறப்பட்டது என்றோ அல்லது இலங்கையின்... Read more »

சீரற்ற காலநிலை: வடமராட்சி கிழக்கில் 20 குடும்பங்கள் பாதிப்பு!

யாழ்ப்பாண மாவட்டம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 20 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் நேற்று நேற்றிலிருந்து பெய்த கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக அனர்த்தம்  முகாமைத்துவ பிரிவின்  தகவல்கள் தெரிவிக்கின்றன.  இது அதிகரிக்கலாம்... Read more »

மக்களுடைய எழுச்சியினால் அரசின் கொள்கையையும், அரசையும் மாற்ற முடியும்…..! எம் ஏ சுமந்திரன்.

மக்களுடைய எழுச்சியினால் அரசின் கொள்கையையும் மாற்ற முடியும் தேவைப்பட்டால் இந்த அரசையும் மாற்ற முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார். வன ஜீவராசிகள் திணைக்களத்தால் வடமராட்சி கிழக்கில் 196 சதுர கிலோமீட்டரை தேசிய பூங்கா... Read more »

எமது வரலாற்றினை ஆவணங்களாக மாற்ற மாநகர முதல்வர் நடவடிக்கை எடுங்கள்! ஆறு திருமுருகன்.

வரலாறுகள் எங்களைவிட்டு மாறிப்போகிறது. வரலாற்றினை ஆவணங்களாக மாற்றவேண்டும். தற்போதுள்ள மாநகர சபையின் முதல்வர் வரலாற்றிலே ஆர்வமுடையவர் என்ற வகையிலே உங்களுடைய காலத்திலே எமது வரலாற்றை ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார். யாழ் மாநகர... Read more »

ஒரே நாடு ஒரே சட்டம் அதே தேரர் ? நிலாந்தன்.

“ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவராக ஞானசார தேரரை ஜனாதிபதி நியமித்தமை என்பது என்னைப் பொறுத்தவரை பொருத்தமானதே. அது அபகீர்த்திக்குரிய ஒரு மாணவனை வகுப்பின் மாணவத் தலைவராக நியமித்தமை போன்றது” இவ்வாறு ருவிற்றரில் பதிவிட்டுள்ளார் நிமால் பெரேரா என்பவர். ஒரே நாடு ஒரே... Read more »