உகத தமிழர் தேசிய பேரவையால் சமைத்த உணவு வழங்கிவைப்பு.

உலக தமிழர் தேசிய பேரவையால் கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில்  நேற்றைய தினம் மதியம் மற்றும் இரவும் 257 பேருக்கு சமைத்த உணவு வழஙகி வைக்கப்பட்டுள்ளது.
சுண்ணாகம் பகுதியில் உள்ள இடம் நீதவான்  நலன்புரி முகாம், உரும்பிராயில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், மற்றும் உரும்பிராய்  நலன்புரி நிலைங்களிற்க்கே இவ்வாறு சமைத்த உணவுகள் வழங்கி வைக்கப்பட்டன.இதில் உலக தமிழர் தேசிய பேரவை பிரதிநிதிகளான இ.முரளீதரன், திருமதி ஜெ.சற்குணேஸ்வரி, தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க யாழ் மாவட்ட இணைப்பாளர் இன்பம், அதன் பிரதிநிதிகளான த.சித்திரா,த.தாட்சாயினி ஆகியோர் கலந்து கொண்டு சமைத்த உணவுகளை வழங்கி வைத்தனர்
குறித்த நலன்புரி நிலையங்கள் 32 ஆண்டுகளாக காங்கேசன்துறை, பலாலி, மயிலிட்டி போன்ற பகுதிகளாக யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து அடிப்படை சுகாதார வசதிகள் எதுவும் இன்றி வசித்துவருவது குறிப்பிட தக்கது.

Recommended For You

About the Author: admin