வடமராட்சி கரையோரத்தில் ஐந்தாவது சடலம் சற்றுமுன் கரை ஒதுங்கியது…….!

வடமராட்சி கிழக்கு பூனைத் தொடுவாய் கடற்கரையில் சற்று முன்னர் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
கடந்த 27/11/2021 அன்று வடமராட்சி கிழக்கு மணல்காட்டிலும், வல்வெட்டித்துறை பகுதியில் சடலங்கள் கரைஒதுங்கியிருந்த நிலையில் 30/11/2021 அன்று வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் ஒருசடலமும் கரை ஒதுங்கியிருந்தன,
இந்நிலையில் இன்றைய தினம் வடமராட்சி சக்கோட்டைப்பகுதியில் பிற்பகல் 2:30 மணியளவில் உருக்குலைந்த நிலையில் சடலம் கரை ஒதுங்கியிருந்தன.
இந்நிலையில் சற்று முன்னர் வடமராட்சி கிழக்கு பூனைத் தொடுவாயிலும் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு சடலங்கள் கரை ஒதுங்குவதனால் மக்கள் மத்தியில் பலத்த அச்ச நிலை தோன்றியுள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews