குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை..! அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் அசாத்சாலி விடுதலை.. |

மத குழுக்களிடையே பகைமையை துாண்டிய குற்றச்சாட்டில் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்.

கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கின்றது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்த தீர்ப்பை வழங்கினார். தீர்ப்பை அறிவித்த நீதிபதி, இனங்கள் அல்லது மதங்களின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும்,

மக்கள் மத்தியில் கோபத்தை தூண்டும் வகையிலும் இதுபோன்ற கருத்துகளை பிரதிவாதி கூறியதாக முறைப்பாட்டாளர்கள் நிரூபிக்க தவறிவிட்டதாக குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews