தொற்றாளர் எண்ணிக்கை நாளாந்தம் 4 சதவீதத்தால் அதிகரிப்பு!

இலங்கையில் ஒக்ரோபர் மாதம் இறுதி வாரத்தின் பின்னர் நாளாந்தம் இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 4 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், மதவழிபாடுகள் உள்ளிட்ட உற்சவங்கள் மற்றும் மரணச் சடங்குகள் என்பவற்றில் அளவுக்கதிகமான மக்கள் ஒன்று கூடியமை மற்றும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றாமை என்பவையே இதற்கான காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.

தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் முன்னெடுக்கப்பட்ட எழுமாற்று கொரோனா பரிசோதனைகள் தற்போது குறைக்கப்பட்டுள்ளன.

முன்னரைப் போன்று பரிசோதனைகளின் அளவு அதிகரிக்கப்பட்டால் தொற்றாளர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Recommended For You

About the Author: Editor Elukainews