பாடசாலைகளை ஒன்றுவிட்ட நாட்கள் நடத்துவது தொடர்பில் அவதானம்!

பாடசாலைகளை எதிர்காலத்தில், ஒன்றுவிட்ட நாட்கள், நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் பங்கேற்றவேளை, இவ்வாறு குறிப்பிட்டார்.
‘நாம் எம்மால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம்.
அனைத்து பாடசாலைகளுக்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில், ஒன்றுவிட்ட நாள் அல்லது இரு குழுக்களாக பிரித்து, பாடசாலைகளை நடத்துவது குறித்த கவனம் செலுத்தியுள்ளோம்.’
‘தற்போது 14.5 மில்லியன் தடுப்பூசி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
கையிருப்பும் உள்ளது.
2.1 மில்லியன் கையிருப்பு உள்ளது.
தடுப்பூசி தொடர்பில் எவ்வித பற்றாக்குறையும் இல்லை.
பின்னர் 30 வயது முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews