மின்சாரம் தாக்கியதில் பரிதாபகரமாக உயிரிழப்பு.

கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த வஇளம் குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

கரவெட்டி மேற்கு இராஜகிராமம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை(05) நண்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான விஜயகுமார் விஜிதரன் (வயது -33) என்பவர் உயிரிழந்தவராவார்.

கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த போது அங்கிருந்த மின்னொழுக்கில் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews