வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் விளையாட்டு கழக இறுதி போட்டிகள்.

வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் விளையாட்டு கழக இறுதி போட்டிகள் அதன் தலைவர் தலமையில் நேற்று 04/11/2021 பிற்பகல் 3:00 மணிக்கு இடம் பெற்றது.

இதில் ஆரம்ப நிகழ்வாக மங்கல விளக்குகளை யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் க.சண்முகநாதன், மருதங்கேணி போலீஸ் பொறுப்பதிகாரி, உதயசூரியன் விளையாட்டு கழக செயலாளர் திரு விஜயழகன், உட்பட பலரும் ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து தேசிய கொடியினை மருதங்கேணி போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரி ஏற்றி வைத்ததை தொடர்ந்து உதைபந்தாட்ட லீக் கொடி உதய சூரியன் விளையாட்டு கழக கொடிகள் அந்தந்த விளையாட்டு கழக தலைவர்களால் ஏற்றி வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகளை மாநகர மிதல்வர் வி.மணிவண்ணன், மருதங்கேணி போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரி வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் க.சண்முகநாதன் உட்பட்ட அதிதிகள் சம்புர்தாய பூர்வமாக தொடங்கி வைத்தனர்.
அதனை தொடர்ந்து இறுதிப் போட்டிகள் இடம் பெற்றவை 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான
இறுதி போட்டியில் ஆழியவளை அருணோதயாவும் வெற்றிலை கேணி சென் செபஸ்ரியனும் மோதிக் கொண்டன, இதில் வெற்றிலை கேணி சென் செபஸ்ரியன் வெற்றி பெற்றது, தொடர்ந்து 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான போட்டியில் உடுத்துறை பாரதி விளையாட்டு கழகமும், கட்டைக்காடு சென் மேரிஸ் விளையாட்டு கழகமும் மோதிக் கொண்டன. இதில் கட்டைக்காடு சென் மேரிஸ் வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற கழகங்களுக்கான கேடயங்கள், பரிசில்களை பிரதம சிறப்பு அதிதிகள் வழங்கி வைத்தனர். குறித்த விளையாட்டு போட்டி 2020 ஆண்டு ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்டு இறுதி நிகழ்வுகள் சுகாதார கட்டுப்பாடுகள் பேணப்பட்டு நேற்று பிற்பகல் ஏழுமணிவரை இடம் பெற்றன.

Recommended For You

About the Author: Editor Elukainews