மூன்று அமைச்சர்கள் குறித்து நாமல் கடும் அதிருப்தி!

சமகால அரசின் செயற்பாடு குறித்து விமர்சித்து வரும் மூன்று அமைச்சரவை அமைச்சர்கள் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

அவர்கள் அரசில் இருந்து கொண்டு அதற்கு எதிராக கருத்து வெளியிடுவதாகவும் நாமல் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது அரசால் முன்னெடுக்கப்பட்டு வரும் யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் ஒன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அது முன்வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அமைச்சர்களின் கருத்துக்களை முன்வைப்பதற்கான சந்தரப்பம் வழங்கப்பட்டது.

அந்த சந்தர்ப்பத்தில் கருத்துக்களை முன்வைக்காமல் வெளியில் சென்று பேசுவது தவறு” – என்றார்.

யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கும் செயற்பாட்டுக்கு எதிராக மூன்று அமைச்சர்கள் வெளியிட்ட கருத்து தொடர்பில் கேட்கப்பட்டபோதே நாமல் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில ஆகியோரே யுகதனவி மின் உற்பத்தி செயற்பாட்டுக்கு எதிராக கருத்து வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews