தாத்தாவுடன் வயலுக்குச் சென்ற 06 வயது பேரன் மின்னல் தாக்கி மரணம்!

புத்தளம், ஆனமடுவ பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆனமடுவ, பாலியாகம பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுவன் தனது தாத்தாவுடன் வயலுக்குச் சென்ற போதே இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு உள்ளானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews