இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் மூவர் படுகாயம்.

திருகோணமலை – நொச்சிக்குளம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் மூவர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்கானவர்கள் திருகோணமலை,சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த பாக்கியராசா விஜயகுமார் (39வயது) அவரது மகனான விஜயகுமார் பிரதாப் (20வயது) மற்றும் நொச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த எஸ்.டக்ஸன் (36வயது) எனவும் தெரியவருகின்றது.

சாந்திபுரம் துர்க்கை அம்மன் ஆலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் இரு குழுக்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மாலை அப்பகுதிக்கு சென்ற குழுவினர் மற்றைய குழுவினரை வாளால் வெட்டியதாகவும், வாள்வெட்டில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகிய மூவரில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், குறித்த நபரை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வாள்வெட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews