மனித மேம்பாட்டு தராதரத்தில் இலங்கைக்கு கிடைத்த கௌரவம்!

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயல் திட்டத்தின் புதிய ஆய்வறிக்கையின்படி, தெற்காசிய பிராந்தியத்தில் மனித மேம்பாட்டு தராதரத்தில் உயர்வான மட்டத்தைப் பேணும் நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது.
தெற்காசிய பிராந்தியத்தில் அண்மைக்காலமாக நிலவும் பலதரப்பட்ட சவால்களுக்கு மத்தியிலும் மனித மேம்பாட்டை முன்னிலைப்படுத்திய இலங்கையின் தொடர் முயற்சிகள், நாட்டு மக்களின் நலன் மற்றும் முன்னேற்றத்துக்கு முன்னுரிமை அளிப்பதில் இலங்கை கொண்டிருக்கும் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை காண்பிப்பதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
உலகளாவிய ரீதியில் மனித மேம்பாட்டில் நிலவும் முன்னேற்றம் மற்றும் ஏற்றத்தாழ்வுகளை வெளிக்கொணரும் வகையில் 2023 2024ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டு அறிக்கை ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயல் திட்டத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
மனித மேம்பாட்டை அளவிடுவதற்கு பயன்படுத்தப்படும் பிரதான கூறுகளில் 2022ஆம் ஆண்டில் அடையப்பட்டுள்ள முன்னேற்றத்தை அடிப்படையாகக்
கொண்டு கணிப்பிடப்பட்ட மனித மேம்பாட்டு சுட்டெண்ணின் பிரகாரமே இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தெற்காசியாவின் இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் மற்றும் மியன்மார் என்பன ‘நடுத்தர மனித மேம்பாடு’ எனும்
அளவுகோலிலும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என்பன ‘மிகக் குறைந்த மனித மேம்பாடு’ எனும் அளவுகோலிலும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews