பளையில் சிறுவன் மீது சரமாரியான தாக்குதல். சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதி….!

கிளிநொச்சி மாவட்டம்  பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் குடும்ப தகராறு காரணத்தால் ஏற்பட்ட முரண்பாட்டில் 14வயது சிறுவன் ஒருவன் மீது  கடுமையான  தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
பளை முல்லையடி கிராமத்தில் சில காலமாகவே தனிநபர் ஒருவர்  கிராமத்தில் தொடர்ச்சியாக பல்வேறு நபர்களுடன் தகராறுகளில் ஈடுபட்டு வருகின்றார்.
குறித்த நபர் முல்லையடியில் வசிக்கும் பெண் ஒருவரை திருமணம் செய்து அண்மைக்காலமாக பளையில் வசித்து வருகின்ற நிலையில் குறித்த நபர் கிராமத்தில் உள்ள அநேகமானவர்களுடன் வீண் தகராறுகள் புரிந்தும் வருகின்றார்.
அதிகளவில் சிறுவர்கள் வசிக்கும் இக்கிராமத்தில் வீண் தகராறுகளை  ஊரவர்களுடன் புரிந்து அவதூறான வார்த்தைகளும் பயன்படுத்தி வருகின்றார் .இதன் காரணமாக பளை பொலிஸ் நிலையத்தில் அதிகளவில் வழக்குகளும் பதிவாகியுள்ளன.இந் நிலையில் நேற்றைய தினம் (22)மாலை பாதிப்புக்குள்ளான சிறுவன் தாயாருடன் வீட்டில் இருந்த வேளையே குறித்த முரண்பாடு  ஏற்பட்டுள்ளது.
தாயை தகாத வார்த்தைகளால் குறித்த வன்முறையாளர் தொட்டுத் தீர்த்தபோது   பாதிக்கப்பட்ட மகன் ஆத்திரமடைந்து நியாயம் கேட்பதற்காக சென்ற வேளை குறித்த சிறுவனை தாக்கியுள்ளார். சிறுவன் கழுத்தில் காயமடைந்த நிலையில் 1990 நோயாளர் காவு வண்டி மூலம்  ஊர்மக்களால் காயமடைந்த சிறுவனை ஏற்றிச்சென்று கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சிறுவர் பாதூகாப்பு பிரிவினருக்கும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews