மாகாண மட்ட பளுதூக்கல் போட்டியில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலைக்கு 3 தங்கப்பதக்கம் உட்பட பல பதக்கங்கள்

மாகாண ரீதியிலான பளுதூக்கல் போட்டிகள் நேற்றையதினம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இதில் யா/ பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு 3 தங்கப் பதக்கங்கள், 2 வெள்ளிப் பதக்கங்கள், 3 வெண்கலப் பதக்கங்கள் என்பன கிடைத்துள்ளன.
அந்தவகையில் 17 வயதுக்குட்பட்ட பளுததூக்கல்
45kg பிரிவில் 60kg பளுவை தூக்கி வி.ஜஸ்மின் 3ம் இடத்தினையும், 55kg பிரிவில் 63kg பளுவை தூக்கி நி.நிறுக்சிகா 3ம் இடத்தினையும்,
59kg பிரிவில் 74kg பளுவை தூக்கி சி.யுஷாந்தி 1ம் இடத்தினையும்,
64kg பிரிவில் 87kg பளுவை தூக்கி ரா.லிசனா 1ம் இடத்தினையும் பெற்றுக் கொண்டனர்.
அதுபோல 20 வயதுக்குட்பட்ட பளுததூக்கல்
49kg பிரிவில் 42kg பளுவை தூக்கி சூ.டிலக்சி 3ம் இடத்தினையும், 55kg பிரிவில் 76kg பளுவை  தூக்கி  இ.றம்மியா 2ம் இடத்தினையும், 71kg பிரிவில் 96kg பளுவை தூக்கி    வி.ஜெஸ்மினா 1ம் இடத்தினையும்,
76kg பிரிவில் – 66 kg பளுளை தூக்கி  அ. சுஜாத்தா 2ம் இடத்தினையும் பெற்றுள்ளார்கள்.
இவர்களுக்கான பயிற்சிகளை, பயிற்றுவிப்பாளர்களான பிரபாகரன் பிந்துஷா, கே.கஜேந்திரன் ஆகியோர் வழங்கினர். இந்த பாடசாலையானது கடந்த சில மாதங்களுக்கு முன்னர், தேசிய மட்டத்தில் நடைபெற்ற பாடசாலைக்கு இடையிலான பளுதூக்கல் போட்டியில் தங்கப் பதக்கம் உட்பட பல பதக்கங்களை பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews