அதி​வேக நெடுஞ்சாலையில் கைவரிசையை காட்டியவர் அதிரடியாக கைது!

ஹெய்யந்துடுவ தெவமின்ன பிரதேசத்தை ஊடறுத்துச் செல்லும் அதிவேக நெடுஞ்சாலையிலுள்ள இரும்பு வேலியையே இவர் வெட்டி, இரும்புகளை திருடியதாக சப்புகஸ்கந்த பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இரும்புகளை விலைக்கு கொள்வனவு செய்த நபரும் பொலிஸாரின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலையின் ​தொழிற்நுட்ப அதிகாரி செய்த முறைப்பாட்டுக்க அமையவே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் அவ்விருவரையும் மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews