பேராயரின் வேண்டுகோளை புறக்கணித்த மட்டக்களப்பு மக்கள் –

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதி நிலை நாட்டப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (21) கருப்பு கொடியை ஏற்றுமாறு பேராயர் விடுத்த வேண்டுகோள் மட்டக்களப்பு மக்களினால் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருந்ததுடன், படுகாயங்களும் அடைந்திருந்தனர்.

இந்த நிலையில் ஞாயிறு தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை எனக் கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி கத்தோலிக்க திருச்சபை ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றைக்  அனுப்பியிருந்தது.

அதனடிப்படையில், தாக்குதலுக்குக் காரணமானவர்களை இதுவரையில் இனங்காண அரசாங்கம் தவறிய காரணத்தினால், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இன்று நாடு முழுவதும் கருப்பு கொடி ஏற்றுமாறு பேராயர் மல்கம் ஆண்டகை வேண்டுகோள் விடுத்திருந்தார்.

எனினும் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எந்த தேவாலயத்திலும் கறுப்புக்கொடிகள் ஏற்றப்படவில்லை.

குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குள்ளான சியோன் தேவாலயத்தில் கூட கறுப்புக்கொடியைக் காணமுடியவில்லை.

Recommended For You

About the Author: Editor Elukainews