ஊரடங்கு வேளையில் கொடூரமாகத் தாக்கப்பட்டு ஆண் ஒருவர் படுகொலை – பெண் உள்ளிட்ட இருவர் கைது.

குருநாகல் மாவட்டம், பொத்துஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்டோம்புவ பிரதேசத்தில் ஊரடங்கு வேளையில் ஆண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் கொடூரமாகத் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தியடோர்வத்த, கல்டொம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதுடன், அவர் மீது கல்வீச்சுத் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தாக்குதலுக்குள்ளான நபர் படுகாயங்களுடன் குருநாகல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தனிப்பட்ட பகையே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவர் உட்பட இருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொத்துஹெர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews