சுதந்திரக்கட்சியின் 14 உறுப்பினர்கள் சம்பளத்தை நன்கொடையாக வழங்க தீர்மானம்…!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்கள் தமது சம்பளத்தை கோவிட் நிதியத்திற்கு வழங்கத் தீர்மானித்துள்ளனர்.

ஆகஸ்ட் மாதச் சம்பளத்தை இவ்வாறு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளனர்.

நேற்றைய தினம் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கோவிட் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நிவாரண நிதியின் மூலம் உதவிகள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கோவிட் பெருந்தொற்று நிலைமை நீங்கும் வரையில் தங்களது சம்பளங்களை இவ்வாறு நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews