வவுனியாவில் வீதியில் நடமாடியவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை! இருவருக்கு தொற்று…!

வவுனியாவில் வீதியில் நடமாடியவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது்

நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் வீதிகளில் நடமாடியவர்களை வழிமறித்து வவுனியா சுகாதாரப் பிரிவினர் இன்று (21) அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டதில் இருவருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வவுனியா நகரப்பகுதிகளில் சுகாதாரப் பிரிவினரும், பொலிசாரும் இணைந்து விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது வீதியில் நடமாடியவர்களை வழிமறித்து அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது மாவட்ட பதில் அரசாங்க அதிபர் நேரடியாக விஜயம் செய்து கண்காணிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டார்.

முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டது.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன், ஏனையவர்கள் சுகாதாரப் பிரிவினராலும், பொலிசாராலும் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்

Recommended For You

About the Author: Editor Elukainews