கொரோனா தொற்றுக்குள்ளான 3,676 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 3,676 பேர் நேற்று (18) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 365,683 இலிருந்து 369,359 ஆக அதிகரித்துள்ளது.

அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 369,359 பேரில் தற்போது 46,227 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக 316,528 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன் 6,604 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews