நட்டத்தில் இயங்கும் ஒரு விற்பனை நிலையத்தை இயக்குவதற்கு 9 இயக்குநர்களும், மூன்று பணியாளர்களும், தலைவராக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர்…!

யாழ். வடமராட்சி கிழக்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் இருபத்து இரண்டு விற்பனை நிலையங்கள், ஒரு மொத்த நிலையம் என்பன இயங்கிவந்த நிலையில் தற்போது ஒரே ஒரு கிளை மட்டுமே இயங்கிவருகிறது.
அதுவும் நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதனை நிர்வகிப்பதறக்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட இயக்குநர்கள் ஏழு பேர் தெரிவு செய்யப்பட்ட நிலையில் அதில் ஒருவர் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் சங்கம் பாரிய நட்டத்தில் இயங்குவதாக தெரிவித்து யாழ் மாவட்ட கூட்டுறவு திணைக்களத்தால் பொதுச் சபையால் தெரிவு செய்யப்பட்ட தலைவர் நீக்கப்பட்டு நியமன தலைவராக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் எஸ் பிரபாகர மூர்த்தி நியமிக்கப்பட்டார்.
அவர் நியமிக்கப்பபட்டதன் பின்னர் இரண்டு விற்பனை நிலைமைகள் மூடப்பட்டு தற்போது ஒரே ஒரு விற்பனை நிலையம் மட்டுமே இயங்கி வருகிறது. அதனை நிர்வகிப்பதற்கு பொது சபையால் நியமிக்கப்பட்ட ஏழு இயக்குநர்களும் யாழ் மாவட்ட கூட்டுறவு திணைக்களத்தால் நியமிக்கப்பட்ட தலைவர் உட்பட இருவருமாக ஒன்பது இயக்குநர்களும், ஒரு பொது முகாமையாளர், ஒரு கிளை மேற்பார்வையாளர், ஒரு எழுதுனர், ஒரு கண்க்காளர் என நான்கு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதே வேளை அச்சுவேலி பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்க்கு வழங்கப்பட்ட அரிசி ஆலை அங்கு அமைக்க முடியாத காரணத்தால் வடமராட்சி கிழக்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கப்பட்டு அதன் சங்க தலமையக வளாகத்தில் 2018 ம் ஆண்டு ரூபா ஏழுபது இலட்சம் செலவில் அமைக்கப்பபட்டும் நிதி பற்றாக்குறை காரணமாக முழுமையாக வேலைகள் நிறைவு படுத்தப்பட்டாமையால் இதுவரை அது இயக்கப்படாமல் காணப்படுகிறது. ஆனாலும் குறித்த அரிசி ஆலையை இயக்குவதற்கு பலர் பங்கு அடிப்படையிலும், வாடகை அடிப்படையிலும், குத்தகை அடிப்படையிலும் பெற்றுக் கொள்ளவும் நிர்வாகத்துடன் அணுகியும் அதனை வழங்குவதற்கு அவர்கள் தயாராக இருக்கவில்லை என பலரும் குற்றம் சாட்டுகின்றதுடன் சங்கத்திற்கு சொந்தமான சுமார் அறுபது இலட்சம் பெறுமதியான பார ஊர்தி,உழவு இயந்திரம் ,கன்ரர் ரக வாகனம் என்பன பழுதடைந்தும் செயலிழந்தும் காணப்படுகிறது,
பணியாளர்களு்கு சம்பள நிலுவை
சங்கத்தில் பணியாற்றிய பல பணியாளர்களுக்கு அவர்களுக்குரிய சம்பளம் பல மாதங்களாக வழங்கப்படாமலிருந்தமையால் பலர் பணி விலகி சென்றதுடன் பணியாற்றிக் கொண்டிருக்கும் பணியாளர்களுக்கும் பல மாதங்கள் சம்பளம் வழஙகாது
நிலுவையில்  உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சங்கத்தின் அழிவிற்க்கு காரணமாக இருந்த கூட்டுறவு திணைக்களம் 
யுத்த காலத்தில் பல்வேறிடங்களிலும்  இயங்கிவந்த தமது சங்கம் கடந்த- 2010 ஆம் ஆண்டு மீள மருதங்கேணியில் கோடிக்கணக்கான சொத்திழந்த நிலையிலும் பொதுச்சபை அனுமதியின்றி மாவட்ட கூட்டுறவு திணைக்களத்தால்  இயக்கப்பட்டது. நியமன அடிப்படையில் அப்போதைய ஆணையாளரால் அப்போதைய பிரதேச செயலர் திருலிங்கநாதன் தலைமையில் மூவரடங்கிய இயக்குநர் சபை நியமனம் செய்யப்பட்டது.
அப்போது பரந்தன் மக்கள் வங்கியில் கிராமிய வங்கி சேமிப்புப் பணம் 96 இலட்சம் ரூபாவும், மணற்காடுப் பகுதியில் இடப்பெயர்வு  காலத்தில் இயங்கிய கிளைகளிலிருந்த சுமார் 25 இலட்சமுமாக சுமார் ஒரு கோடியே 25 இலட்சம் கொண்டே சங்கம் மீள இயங்க ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.அவர்களது பொறுப்பற்ற செயலால் நிதி சரியான திட்டமிடல் இன்றி செலவு செய்யப்பட்டமையால் சங்கம் வளர்சியில் சரிவடைய தொடங்கியுள்ளது.அப்போதைய இயக்குநர் சபை நிதி நடவடிக்கைகளுக்கு
சரியான பொறுப்புக் கூறல்களில்லை. பல இலட்சங்களுக்குச் சரியான கணக்கு இல்லை. 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடாத்தப்பட்டு இயக்குநர் சபையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்டாகவும்.
அப்போது கூடிய பொதுச்சபை நாற்பது இலட்சம் ரூபா காசோலை மோசடிக் குற்றச்சாட்டு உட்படப் பல நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது. இதற்கு அப்போதைய இயக்குநர் சபையோ அல்லது கூட்டுறவு அபிவிருத்தி உதவி அணையாளரோ எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
கிராமிய வங்கி வைப்பாளர்களும் ஏமாற்றப்பட்டனர்.
தமது எதிர்காலம் கருதியும் தமது பிள்ளைகள் நலன் கருதியும் வடமராட்சி கிழக்கு பிரதேசத்திலுள்ள நூற்றுக்கணக்கான மக்கள் தமது வங்கி என கருதி ஒரு கோடிக்கு மேல் பண வைப்பு செய்துள்ளனர்.அவர்களது சேமிப்பு பணமாக பரந்தன் மக்கள் வங்கியில் இருந்த 9600000 இலட்சம் பணம் நுகர்ச்சி விற்பனைக்கு பயன்படுத்தப் பட்டுள்ளமையாலும்,  சங்கம் தொடர்சியாக ஏற்பட்ட நட்டத்தினாலும் நியமன இயக்குநர்களின் செயற்றிறன் இன்மையாலும பணிக் குழுவின் அர்ப்ணிப்பின்மையாலும் அக் கிராமிய வங்கி சேமிப்பாளர்களது நிதி இழக்கப்ட்டிருந்த  நிலையில் பல வைப்பார்கள் சட்டரீதயாக
 அணுகியதன் காரணமாக வைப்பாளர்களுக்கு நடப்பின்  25 வீத பணம் வட்டி ஏதுவுமின்றி மீளளிக்கப்பட்டுள்ளன.
 
பொதுசதசபை உறுப்பினர்கள் கவலை 
தாம் தமது பிரதேசத்தின் சொந்த நிறுவனமாக கட்டிக்காத்து வந்த தமது வடமராட்சி கிழக்கு பலநோக்கு கூட்டுறவு சங்கம் யாழ் மாவட்ட கூட்டுறவு திணைக்களத்தாலும்,  நியமன இயக்குநர்களாலும் செயற்றிறனற்றிருந்த பணித்தொகுதியாலும் செயலிழந்தது மட்டுமின்றி பல இலட்சம் கடனிலும் தற்போது உள்ளதாகவும் இதனை எப்படி மீண்டும் சீரமைப்பது என்பதுவுமே….

Recommended For You

About the Author: Editor Elukainews