களி மண்ணால் வீதி அமைத்து கள்ள மண் ஏற்றும் கும்பல்,நாகர்கோவிலில் சம்பவம்.!(வீடியோ இணைப்பு)

வடமராட்சி கிழக்கில் சட்டவிரோதமான மணல் அகழ்வு அதிகரித்துள்ளாத பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
சில காலமான வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் குடாரப்பு பகுதிகளில் சட்டவிரோதமான மணம் அகழ்வு அதிகரித்துள்ளதாகவும் அதனை தடுக்க வேண்டியவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். தமது நாகர்கோவில் கிராமத்தின் கிழக்கு பகுதியான  குடாரப்பில் சட்ட விரோதமான மணல் அகழ்வில் ஈடுபடுவோர்கள் களிமண்ணால் அவர்களே வீதி அமைத்து நாளாந்தம் பல ரிப்பர் ரக வாகனங்களும், உழவு இயந்திரங்களும் மணல் மண்ணை ஏற்றிச் செல்வதாகவும், அவை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களுக்கும், பிரதேச செயலாளர் பிரதேச சபை உட்பட அனைத்திடங்களின் கவனத்திற்க்குக் கொண்டுவந்தும் எந்த பயனும் கிடைக்கவில்லை எனவும் உரியவர்கள் தமது சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள்  மேலும் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews