பொது முடக்கம் கிடையாது..! கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். ஜனாதிபதி திட்டவட்டம்… |

நாட்டில் பொதுமுடக்கம் விதிக்கப்படாது. ஆனாலும் பயணக் கட்டுப்பாடு கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 

பொது முடக்கம் விதிக்கப்பட்டால், பொருளாதாரம் பாதிக்கப்படும். மேலும் தினசரி ஊதியம் பெறுபவர்களும் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொற்றுப் பரவலைத் தடுக்க தடுப்பூசியை துரிதப்படுத்தப்படுத்த வேண்டும்.

அதனை செயற்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews