பிரித்தானியாவில் கொரோணா மரணம் அதிகரிப்பு! –

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 170 பேர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இது கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது 16 வீத அதிகரிப்பாகும்.

அத்துடன், 26,852 பேர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்  வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 12ம் திகதிக்கு பின்னர் அதிகளவாக கோவிட் மரணங்கள் இன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இதேநாளில் 23,510 கோவிட் வழக்குகளும் 146 உயிரிழப்புகளும் பதிவாயிகியிருந்தன.

2020 இல் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து, இங்கிலாந்தில் மொத்தம் 131,149 பேர் உயிரிழந்துள்ளதுடன், 6,322,241 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அண்மைய தரவுகளின்படி, ஆகஸ்ட் 13ம் திகதி 773 கோவிட் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், கடந்த ஏழு நாட்களில் 5,549 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 3.9 வீத அதிகரிப்பாகும். திங்களன்று, இங்கிலாந்தில் 35,716 பேர் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றனர், இதன்படி, தடுப்பூசியின் முதல் அளவை பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 47,369,418 ஆக உயர்ந்துள்ளது.

138,390 பேருக்கு நேற்று இரண்டாவது அளவு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி, இரண்டு அளவுகளையும் பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 40,841,971 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, மொடர்னா இன்க் கோவிட்-19 தடுப்பூசியை 12 முதல் 17 வயது வரையிலான சிறுவர்களுக்கு பயன்படுத்துவதற்கு பிரிட்டனின் சுகாதார கட்டுப்பாட்டாளர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதத்தில் ஃபைசர் தடுப்பூசியை 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பயன்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து மருத்துவ கண்காணிப்பு அதிகாரிகளினால் சிறுவர்களின் பயன்பாட்டுக்காக ஒப்புதல் அளிக்கப்பட்ட இரண்டாவது தடுப்பூசி வகை இதுவாகும்.

பிரிட்டனின் தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டுக்குழு ((JCVI)) ஆகஸ்ட் 4 அன்று 16 முதல் 17 வயதுடைய சிறுவர்களுக்கு ஃபைசர் கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற அனுமதித்தது

Recommended For You

About the Author: Editor Elukainews