வெளிநாட்டு விமானத்தில் இரகசியமாக அழைத்து செல்லப்பட்ட நபர் குறித்து வெளியான தகவல் –

சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த விமான அம்பியூலன்ஸ் மூலம் இலங்கையைச் சேர்ந்த பிரபலம் ஒருவர் இரகசியமாக சிங்கப்பூர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில்,இவ்வாறு அழைத்து செல்லப்பட்ட நபர் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேர்மனிலிருந்து மஸ்கட் வழியாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அம்பியூலன்ஸ் விமானமொன்று நேற்று முன்தினம் சனிக்கிழமை வந்தடைந்துள்ளது.

அதில் சிங்கப்பூரைச் சேர்ந்த அஜய் பட்டாச்சார்யா என்ற சிங்கப்பூர் பிரஜை வருகை தந்துள்ளதுடன், இவர் ஜேர்மனியில் வைத்து திடீர் சுகயீனமடைந்த நிலையில் கட்டுநாயக்கவிற்கு அழைத்துவரப்பட்டு, சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்கவுக்கு வந்த அந்நாட்டிற்குச் சொந்தமான அம்பியூலன்ஸ் விமானம் ஊடாக சிங்கப்பூருக்கு நேற்று அதிகாலை அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையைச் சேர்ந்த விமான சேவைகள் நிறுவனமே இந்த செயற்பாட்டினை ஒழுங்கமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews