உதவ வந்தவரின் சங்கிலி அறுப்பு. வசமாக மாட்டிய திருடன் …!

யாழ்.காங்கேசன்துறை வீதியில் சிவலிங்கபுளியடி பகுதியில் மோட்டார் சைக்கிளை மறித்து உதவி கேட்டவருக்கு உதவி செய்ய சென்றவருடைய. சங்கிலியை அறுத்து சென்ற சம்பவம் நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. 

சம்பவத்தில் சங்கிலியை அறுத்துச் சென்றவர் யாழ்.பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். சங்கிலியும் மீட்கப்பட்டிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,

சிவிலிங்கபுளியடியில் வீதியில் நின்ற நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தவரை வழிமறித்து தன்னை ஏற்றிச் செல்லுமாறு கேட்டுள்ளார். இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் சென்றவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திய நிலையில் அவர் அணிந்திருந்த 6 பவுண் தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு உதவி கேட்டவர் தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து சில மணி நேரத்தில் திருடன் மடக்கி பிடிக்கப்பட்டான்.  திருட்டில் ஈடுபட்டிருந்த நபர் வண்ணார்பண்ணை ஓடை வீதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் எனவும் அண்மையிலேயே சிறையிலிருந்து விடுதலையானவர் எனவும் கூறப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews