பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் முதியவரின் சடலம்…!

பருத்தித்துறை சுப்பர்மடத்தில் முதியவர் ஒருவர் சடலமாக காணப்படுவதாக பருத்தித்துறை போலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று அதிகாலை பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை பொலிஸார் சம்பவ இடம் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
குறித்த முதியவர் கோப்பாய் பகுதியை சேர்ந்தவர் என்றும் தனது திருமணமான மகனிடம் கரவெட்டி பகுதிக்கென வருகை தந்தவர் என்றும வழி தவறு சுப்பர்மடம் பகுதிக்கு சென்றிருக்காலம் என்றும் ஊகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்டு உடற்கூற்று பரிசோதனை மற்றும் பீசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டே இறுதி முடிவுகள் ஏடுக்கப்படும் என்றும் போலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடமராட்சி

Recommended For You

About the Author: Editor Elukainews