யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் சுமூகமான முறையில் எரிபொருள் விநியோகம், பலருக்கு ஏமாற்றம்…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் நேற்றைய தினம் 31/07/2022  சுமூகமான முறையில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றது.
எரிபொருள் நேற்று காலை 11 மணி முதல் மந்திகை பொருள் நிரப்பு நிலையம் மற்றும் புலோலி எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியவற்றில் பெட்ரோல் விநியோகம் இடம்பெற்றது.
 எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் பெற்றுக்கொள்வதற்காக மிக மிக நீண்ட வரிசையில் மக்கள் நேற்று முன்தினம் முதல்  காத்திருந்தே நேற்று  இரவு 9 மணி வரை  காத்திருந்து  பெட்ரோலை நிரப்பி சென்றதுடன்  நூற்றுக்கணக்கானவர்கள்  பெட்ரோல் பெற முடியாமல் திரும்பிச் திருப்பி அனுப்பப்பட்டதையும்  அவதானிக்க முடிந்தது.
புலோலி எரி  பொருள் நிரப்பு நிலையத்தில் 3,4,5 ஆகிய இலக்கங்களுக்கு பெட்ரோல் வழங்கப்பட்ட போதும் பல நூற்றுக்கணக்கானோர் மிக மிக நீண்ட வரிசைஇல் காத்திருந்தும்  இரவு 9 மணிக்குப் பின்னர் பெட்ரோல் பெற்றுக்கொள்ள முடியாமல் திரும்பி சென்றதையும்  அவதானிக்க முடிந்தது.
குறித்த புலோலி  எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 3,  4, 5 ஆகிய இலக்கங்களுக்கு பெட்ரோல் விநியோகம் இடம்பெற்ற  இதேவேளை குறித்த புலோலி  எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக மருத்துவ சுகாதார பணியாளர்களுக்கு தனியான வரிசையிலும் பெட்ரோல் வழங்கப்பட்டது.
 இதிலும் பல நூற்றுக்கணக்கான அத்தியாவசிய சேவை பணியாளர்கள் பெட்ரோல் பெற்றுக் கொண்டு சென்றது அவதானிக்க முடிந்தது.
இதேவேளை  மக்கள் எரிபொருள் நிரப்புவதற்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை மிக நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோலை பற்றி சென்றனர்.
எனினும்  பெட்ரோல் நிறைவடைந்துள்ளது  என புலோலி பலநோக்கு கூட்டுறவு  சங்கத்தினரால் அறிவிக்கப்பட்ட நிலையில் மிக நீண்ட நேரமாக காத்திருந்தும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர் குறித்த வடமராட்சியில் உள்ள இரண்டு எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கும் பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி
பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் பிரியந்த சமரசிங்க தலமையில்ம சத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

Recommended For You

About the Author: Editor Elukainews