அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆர்ப்பாட்டம்…!

பல்கலைக்கழகங்களை உடனயாக திறக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக இன்று அடையாள சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், ஒன்றியம் ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டது.

பல்கலைக்கழகங்களை மூடி இரண்டு வருடங்களாகின்றன, மாணவர்களை கருத்திற்கொண்டு பல்கலைக்கழகங்களை உடனடியாக திறக்கவும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பிலான சட்டமூலத்தை உடனடியாக நீக்கவும், மாணவர்கள் வீதியில், அரசாங்கம் உறக்கத்தில் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Recommended For You

About the Author: admin