வீட்டு கூரையை பிரித்து திருட்டு…….!

முல்லைத்தீவு – முள்ளியவளை –  மாமூலை பகுதியிலுள்ள வீடொன்றில்  22.01.2022 நேற்று முன்தினம்  முற்பகல் வேளையில் திருட்டுச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டின் குடும்பத்தலைவன் கால்நடை வளர்ப்பிற்காகவும், மனைவி உறவினர் வீட்டிற்கும் சென்ற நிலையில், வீட்டில் எவருமில்லாத சமயம் வீட்டின் கூரையினைப் பிரித்து உள்நுழைந்து, வீட்டு அலுமாரியில் இருந்த ஒருஇலட்சத்து 90ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் முள்ளியவளைப் பொலிஸாருக்கு தாம் தகவல் வழங்கியதைத்தொடர்ந்து, பொலிஸார் நேரடியாக வீட்டிற்கு வருகைதந்து நிலைமைகளைப் பார்வையிட்டதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து 23.01.2022 அன்று குறித்த வீட்டிற்கு தடயவியல் பொலிஸ் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இந்தத் திருட்டுச்சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews