சிங்கள மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் எந்தவொரு திட்டங்களுக்கும் ஆதரவில்லை….எம் ஏ.சுமந்திரன்!

சிங்கள மக்களை பொருளாதார ரீதியில் பின்தள்ளும் எந்தவொரு திட்டங்களையும் தாம் ஆதரிக்கப்போவதில்லை என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக மூடிய அறையில் கருத்து தெரிவித்துள்ளதாக பிரித்தானியாவில் இருக்கக்கூடிய தமிழ் பிரிவுக்கு பொறுப்பாக இருக்கக்கூடிய தொழிற்கட்சியினுடைய தலைவர் சென். கந்தையா தெரிவித்துள்ளார்.

Gsp பிளஸ் கடந்தாண்டு தவறுவதற்கான முதல் காரணம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனே ஆவர்.இதற்கான மின்னஞ்சல் ஆதாரமும் தன்னிடம் உள்ளதாகவும்,இலங்கையை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் காப்பாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை முன்னெடுத்து வருகின்ற வெளித்திட்டங்கள் மிகவும் முன்னேற்றகரமாக உள்ளது என லோட் தாரிக் அஹமட் தெரிவித்த கருத்து தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இலங்கையை சர்வதேச விசாரணைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதில் அனைவரும் ஒற்றுமையான செயற்பட வேண்டும்.

பிரித்தானியாவில் இருக்கும் தமிழர்கள் எதற்காக போராடுகின்றார்கள் என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

அதாவது அண்மையில் இலங்கை ஜனாதிபதி கிளாஸ்கோ நகரிற்கு வருதை தந்த போது பல முக்கிய அமைப்புக்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டு போராட்டங்களை மேற்கொண்டனர்.

இதன்போது பிரித்தானிய தமிழர்கள் மேற்கொண்ட அழுத்தம் காரணமாகவே ஸ்கொட்லாந்தில் இலங்கைக்கான பொலிஸ் பயிற்சி இடை நிறுத்தப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும்,இலங்கையை சேர்ந்த சில தமிழ் உறுப்பினர்கள் சிங்கள மக்களுக்காகவும்,இலங்கை அரசாங்கத்திற்கும் ஆதரவாக செயற்பட்டு வருகின்றனர் என்றும் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews