நெற்பயிர்களுக்கு  விசமியால்   தடைசெய்யப்பட்ட  கிருமிநாசினி  விசிறல்.

 கிளிநொச்சி கமநலசேவை நிலையத்திற்குற்பட்ட முரசுமோட்டை கோரக்கன் காட்டுப்பகுதியில்   இரண்டு  ஏக்கர் வயல்நெற்பயிர்களுக்கு  தடைசெய்யப்பட்ட கிருமிநாசினியான  ரவுன்டப் எனப்படும்   கிருமிநாசினியினை முன் பகை காரணமாக  விசுறப்பட்டுள்ளது.
பயிர்செய்கை  பண்ணப்பட்டு     50நாட்கள் கடந்த 2 ஏக்கர் நெற் பயிர்கள்  மீதே ரவுன்டப்  கிருமிருநாசினி  விசிறப்பட்டுள்ளது.
இதன்  காரணமாக  2 ஏக்கர்  நெல் வயலும் முற்றாக  அழிவடைந்துள்ளன.    இச்சம்பவம்  தொடர்பாக   கிளிநொச்சிகமநல சேவை  நிலைய விவசாயபோதனாசிரியரிடம் முறையிடப்பட்டுள்ளதாகவும்.  சம்பவ இடத்திற்கு  சென்று அவர் பார்வையிட்டுள்ளதாகவும்  தடைசெய்யப்பட்ட  கிருமிநாசினி விசிறப்பட்டமையினை  உறுதி செய்துள்ளதாகவும் குறித்த சம்பவம்  தொடர்பாக   கிளிநொச்சி பொலிசாரிடம்  முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும்.
நெற்பயிர்களுக்கு  ரவுன்டப்  மருந்தினை  விசிரியவர்  இனங்காணப்பட்டு   06.10.2022 அன்றையதினம்  கிளிநொச்சி பொலிஸ்  நிலையத்திற்கு  வருகை தரும்படி  கட்டளை  வழங்கப்பட்டுள்ளதாகவும்  எனவும்   பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews