நலிந்துபோயுள்ள எமது மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும், கட்டியெழுப்புவதே உள்ளூராட்சி சபைகளின் நோக்கமாக இருக்கவேண்டும். மாறாக, மக்களின் வாழ்வாதாரத்தை நலிவடையச் செய்து, சபைக்கு வருமானமீட்டுவது அல்ல என்பதே மக்கள் பிரதிநிதிகளான எமது நிலைப்பாடாகும். அதேவேளை சபையின் சொத்துக்களை பயனற்றதாக்குவது எமது நோக்கமல்ல என்பதையும் குறிப்பிடுகின்றேன் என பருத்தித்துறை நகரபிதா வின்சன் டீ போல் டக்ளஸ் போல் குறிப்பிட்டுள்ளார். அவர் உள்ளூராட்சி ஆணையாளருக்கு பருத்தித்துறை மரக்கறி சந்தை விவகாரம் தொடர்பாக அவர் அனுப்பிய கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன் முழு விபரமும் வருமாறு

தவிசாளர்,
NP/14/41/(5)/6/ veg mark/2025
பருத்தித்துறை நகர சபை
2025.11.15
உள்ளூராட்சி ஆணையாளார்
உள்ளூராட்சித் திணைக்களம்
வடமாகாணம்.
புதிய மரக்கறிச் சந்தையினை இடமாற்றம் செய்வது தொடா்பாக
மேற்படி விடயம் தொடர்பாக தங்களது NP/14/4/ஊயுஃஊழஅஃஆநஅ.ஊழஅஃPPவுரு ஊஃ2025 இலக்க 2025.11.11ம் திகதிய கடிதத்தில் குறிப்பிட்ட விடயங்களுக்கான பதிலாக இக்கடிதம் அமைகின்றது.
குறித்த நீதிமன்ற வழக்கானது, மேற்தளத்தில் இயங்கிய மரக்கறிச் சந்தை வியாபாரிகளால், புதிய மரக்கறிச் சந்தைக்கு இடமாற்ற மறுப்புத் தெரிவித்து நகரசபைக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்காகும். நகரசபையால் புதிய சந்தைக்கு வியாபாரிகளை வலிந்து இடமாற்றஞ்செய்ய முற்பட்டவேளை, தொடுக்கப்பட்ட இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வழக்காளிகளான வியாபாரிகளின் வியாபாரத்தை குழப்பக் கூடாது என நீதிமன்றம் சிலமாத காலத்திற்கு இடைக்காலத் தடையுத்தரவொன்றை வழங்கியிருந்தது. அவ்வுத்தரவு மீளப்பெறப்பட்டவுடன், வழக்கு நிறைவடையாத நிலையில், நகரசபை நிh;வாகத்தால் மேற்தள சந்தைக் கதவுகள் மூடப்பட்டு, கட்டாயத்தின் போpல் தாம் வௌpயேற்றப்பட்டிருந்ததாக வியாபாhpகள் தெரிவித்திருந்தனா;. தமது வாழ்வாதாரமான மரக்கறி வியாபாரத்தைத் தொடா;ந்து தக்கவைக்கும் நோக்கில், வேறு வழியெதுவுமின்றி நிh;ப்பந்தத்தின் போpல் புதிய சந்தைக் கட்டடத்திற்கு செல்ல நோ;ந்ததாக அவா;கள் குறிப்பிடுகின்றனா;. பின்பு, உள்;ராட்சித் தோ;தல் நடைபெற்றமையால், சபையின் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி இப்பிரச்சினைக்குத் தீh;வை எட்டுவதென்ற நோக்கத்துடன் அவ்வழக்கினை, வழக்காளிகளான வியாபாரிகள் கைவாங்கியதாகக் குறிப்பிடுகின்றனா;.
சபைத்தீh;மானத்திற்கு அமைவாக நிபுணர்கள், ஆர்வலர்கள் அடங்கிய குழுவொன்றை அமைத்து ஆராய்வதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், தமக்கு விரைவில் தீர்வு வழங்குமாறு கோரி கடந்த மாதம் மரக்கறிச்சந்தை வியாபாhpகளும், பருத்தித்துறை வா;த்தகர் சங்கமும் இணைந்து கடையடைப்பு மற்றும் கவனயீர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.
தற்போது நிபுணர் குழுவின் அறிக்கை எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அது சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
பொதுமக்களுக்கான அபிவிருத்தித் திட்டமொன்று மேற்கொள்ள முன்பு அது தொடர்பான பொதுமக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்தல் அவசியமாகும். அவ்வாறில்லையெனின் அது மக்களுக்கானதாக அமையாது. அந்தவகையில், குறித்த மரக்கறிச்சந்தையின் அமைவிடம் தொடர்பிலோ அல்லது அதன் கட்டமைப்பு மாதிரி தொடர்பிலோ அதன் முதலாம் மட்டப் பயனாளிகளான மரக்கறிச்சந்தை வியாபாhpகளின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை.
இது அவர்கள் மீது வலிந்து திணிக்கப்பட்ட சுமையாகும் என்பதுடன், இடவமைவு தொடர்பான சாத்தியவள ஆய்வு மேற்கொள்ளப்பட்டமை, பொதுமக்கள் தௌளிவுபடுத்தப்பட்டமை தொடர்பிலும் சபையால் அறியமுடியவில்லை. எனவே, வியாபாரிகளின் கருத்துக்கள் எதுவும் கேட்கப்படாத நிலையில், அவர்கள் முறைப்பாடு செய்யவில்லை எனக்கூறுவது பொருத்தமாகாது என்பதைத் தயவுடன் தெரிவிக்கிறேன். முறையான வகையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் கருத்தாய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தால் இப்படி ஒரு சிக்கலான நிலைக்கு எமது சபை முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டிருக்காது.
புதிதாக அமைக்கப்பட்ட சந்தைக் கட்டடமும் சபையின் சொத்தாகும். எனவே, அதனைப் பொதுமக்களுக்கும், சபைக்கும் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கான மாற்றுத் திட்டங்கள் நிபுணர்குழுவின் அறிக்கையில் சிபார்சு செய்யப்பட்டுள்ளது. இதுவும் சபைக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளது. எனினும், மழைநீர் பிரச்சினைக்கு முதலில் தீர்வு கண்ட பின்னரே, அதனைச் செயற்படுத்தக்கூடியதாக அமையும்.
இதற்கு பதிலளிப்பதற்கு சந்தையின் வரலாறு அவசியமாகிறது. நவீன சந்தைக் கட்டடத் தொகுதியின் கீழ்தளத்தில் ஒரு புறத்தில் மரக்கறிச்சந்தை நிறுவுவதாக திட்டமிடப்பட்டே, நவீன சந்தைக்கட்டடத் தொகுதியானது அமைக்கப்பட்டிருந்தது. எனினும், தனித்தனியாக கதவுகள் போடப்பட்டதால், கடையாகக் கருதி கேள்வி கோரி வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டதால், பல இடர்பாடுகளின் மத்தியில் மரக்கறிச்சந்தையை மேற்தளத்திற்கு மாற்றுவதென தீர்மானிக்கப்பட்டமைக்கு அமைவாக, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மேற்தளத்தில் இயங்கி வருகிறது. அதன்பின்னர் அக்கட்டடத்தின் கீழ்தளத்திற்கு மாற்றுமாறே வியாபாரிகள் தொடர்ச்சியாகக் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.
அது 2017 இல் மட்டுமல்ல, தற்போது வரை அதே கோரிக்கையே அவர்களால் முன்வைக்கப்படுகின்றது. எனினும், புதிய மரக்கறிச் சந்தையின் நிரஸமாணப் பணிகளின்போது, வியாபாரிகளின் அபிப்பிராயங்கள் மற்றும் கருத்துக்களைப் பெறுவதற்கு குறைந்தபட்சம் கலந்துரையாடல் ஒன்றுகூட நகரசபையால் நடாத்தப்பட்டிருக்கவில்லை என்பது கவலைக்குரியதாகும்.
மரக்கறிச்சந்தைக்கான குத்தகை கோரப்பட்டுள்ளபோதும், தற்காலிகமாக இயங்கும் மேற்தள மரக்கறிச் சந்தைக்கு அதே குத்தகையை அறவிடுவதற்கு சபையில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கமைய குத்தகை வருமானம் அறவிடப்படின், வருமான இழப்பு எதுவும் ஏற்பட வாய்ப்புகள் இல்லை என்பதை அறியத்தருகிறேன்.
நிறைவாக, நிபுணர் குழுவின் அறிக்கைக்கு அமைவாக, மரக்கறிச் சந்தையை நவீன சந்தை கட்டடத் தொகுதியின் கீழ் தளத்தில் இயங்க வைப்பது குறித்தும், தற்காலிக ஏற்பாடாக முன்பு இயங்கிய மேற்தளத்தில் இயங்கவைப்பது குறித்தும் எம்மால் ஆராயப்பட்டு வந்த நிலையில், கடந்த 12.11.2025ம் திகதி புதிய சந்தையில் ஏற்பட்டிருந்த சில நிகழ்வுகள், மற்றும் மழைநீரால் ஏற்பட்ட சுகாதாரச் சீர்கேடுகள், வியாபாரிகளின் கோரிக்கை நிவேறாமை போன்ற காரணிகள், வியாபாரிகளை 13.11.2025ம் திகதி பழைய சந்தையில் வலிந்து வியாபாரம் மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளியிருக்கலாம் எனக்கருதுகிறேன்.
இதுபற்றி அறிந்தவுடன், வியாபாரிகளைச் சந்தித்து அடுத்த சபை அமெ்வில், நிபுணர் குழுவின் அறிக்கையைச் சமர்ப்பித்து உரிய தீர்மானம் மேற்கொள்ளும் வரை, சிறிது காலம் புதிய சந்தையில் தொடர்ந்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டிருந்தேன். எனினும், “அங்கு போதிய வியாபாரமின்மையால் நாம் நஸ்டமடைந்துள்ளதாகவும், தம்மை இங்கிருந்து அகற்ற நினைத்தால் தாம் உயிரை மாய்க்க வேண்டி வரும்” என வியாபாரிகள் ஒருசிலர் குறிப்பிட்டிருந்ததுடன், கையில் மண்ணெண்ணெய் போத்தலையும் வைத்திருந்தனர் எனவே, இத்தகைய உணர்வு பூர்வமான விடயத்தை அசம்பாவிதமின்றி அவதானத்துடன் கையாளவேண்டி ஏற்பட்டதால், பழைய சந்தையிலிருந்து வியாபாரிகளை வெளியேற்றும் முடிவை தற்காலிகமாகக் கைவிட்டிருந்தேன் என்பதுடன் இதுபற்றி சபையில் ஆராயப்படும் என்பதையும் அறியத்தருகிறேன்.
நீண்டகாலமாக மேற்தளத்தில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த வியாபாரிகள் அனைவரும் மீண்டும் மேற்தளத்தில் வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நிலையில், புதிய சந்தை அமைக்கப்பட்ட பின்னர் புதிதாக வியாபாரம் மேற்கொள்ளும் ஐந்து வியாபாரிகள் மட்டும் புதிய சந்தையில் வியாபாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களின் குடும்ப உறவினர்களிடமே புதிய சந்தைக்குரிய காணி கொள்வனவு செய்யப்பட்டது என்பதுடன், அவர்கள் புதிய சந்தைக் கட்டடத்தின் அயலவர்கள் என்பதால், அவர்கள் மேற்தளத்திற்குச் செல்ல விரும்பவில்லை.
இதற்கு மேலதிகமாகச் ஒரு சில விடயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். பொதுமக்கள் நலனுக்காகச் செயற்படவே எமது சபை அமைக்கப்பட்டுள்ளது. நவீன சந்தைக் கடைத்தொகுதி, மரக்கறிச் சந்தை, நகர வர்த்தக நிலையங்கள் மற்றும் முச்சக்கர வண்டித் தரிப்பிடம் என்பன ஒன்றில் ஒன்று தங்கியிருப்பவையாகும். தற்போது, மரக்கறிச் சந்தை இடமாற்றத்தினால் சந்தை வியாபாரிகள் மட்டுமன்றி, வர்த்தகர்களினதும் வருமானங்கள் வீழ்ச்சி அடைந்துள்ளதாக கவலையுடன் அறியத்தந்துள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரை, நகரமொன்றின் மையப்புள்ளியாக சந்தையே அமைகின்றது. சந்தையை மையமாகக் கொண்ட நகரமே பொருளாதார மத்தியில் அபிவிருத்தி அடையும். நெல்லியடி, மருதனர்மடம், சுன்னாகம், திருநெல்வேலி, சாவகச்சேரி, கொடிகாமம் என அனைத்து நகரங்களின் பொருளாதார உயிர்நாடிகளாக சந்தைகளே அமைந்துள்ளன. எனவே, சந்தையினை நகரிலிருந்து அகற்றி, ஒதுக்குப்புறமான ஓர் இடத்தில் அமைப்பதால் எமது நகரம் முழுமையும் வலுவிழந்துபோகும் அபாயம் காணப்படுகின்றது என்பது பலராலும் சுட்டிக்காட்டப்படும் விடயமாக உள்ளது. அத்துடன், இது குறுகலான வீதியில், நகர மத்தியிலிருந்து 150 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. எனவே, புதிய மரக்கறிச் சந்தைக்கு செல்வதை விட, தற்காலிகமாக மேற்தளத்திற்கு செல்வது மக்களுக்கு இடையூறாக அமையாது என்பது இதனைப் பார்வையிடும் அனைவருக்கும் புரியும் என நினைக்கிறேன்.
நலிந்துபோயுள்ள எமது மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்புவதே உள்ளூராட்சி சபைகளின் நோக்கமாக இருக்கவேண்டும். மாறாக, மக்களின் வாழ்வாதாரத்தை நலிவடையச் செய்து, சபைக்கு வருமானமீட்டுவது அல்ல என்பதே மக்கள் பிரதிநிதிகளான எமது நிலைப்பாடாகும். அதேவேளை சபையின் சொத்துக்களை பயனற்றதாக்குவது எமது நோக்கமல்ல என்பதையும் குறிப்பிடுகின்றேன்.
மேலும், தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டது போல, இவ்விடயத்தை ஆராய்வதற்காக கௌரவ ஆளுநரால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் நலன்கருதி சுயாதீனக் குழுவொன்று அமைக்கப்படுமாயின், அக்குழுவிற்குத் தேவையான சகல ஒத்துழைப்பும் சபையால் வழங்கப்படும் என்பதைத் தயவுடன் அறியத்தருகிறேன்.
இத்தகைய நிலையில், இன்றையதினம் எமது பிரதேச சுகாதார வைத்திய உத்தியோகத்தர் உள்ளிட்ட குழுவினர் மரக்கறிச் சந்தையை பார்வையிட்டிருந்ததுடன், புதிய சந்தைக் கட்டடத்தின் மலக்குழிக்கு மேலாக நீரஸ நிறைந்தமை, குடிநீர் கிணற்றுக்குள் அசுத்தநீர் சென்றமை போன்ற காரணங்களால் மழைநீரால் தொற்றுநோய் பரவும் அபாயங்கள் காணப்படுவதாக விசனம் தெரிவிக்கப்பட்டது.
எனவே, நகரசபைச் சட்டத்தின்படி பொதுச்சுகாதாரம் தொடர்பாக பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு தவிசாளரையே சாரும் என்பதால், பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில், அனைத்து வியாபாரிகளும் நவீன சந்தையின் மேற்தளத்தில் வியாபாரத்தினை மேற்கொள்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் எம்மால் செய்யப்பட்டுள்ளன. அடுத்துவரும் நாட்களில் தொடர்மழை ஏற்படவுள்ளதாக வானிலை முன்னறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதால், சமூகப்பொறுப்புடன் என்னால் எடுக்கப்பட்ட இந்நடவடிக்கையைத் தவறான புரிதலுடன் தாங்கள் அணுகவேண்டாம் எனத் தயவுடன் கேட்டுக்கொள்வதுடன், மனிதநேயம் கருதியும், பொதுச்சுகாதாரத்திற்கு முன்னுரிமையளித்தும் தற்காலிக ஏற்பாடாகவே சந்தையை மேற்தளத்தில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைத் தங்களுக்கு மீண்டும் தயவுடன் அறியத்தருகிறேன். அத்துடன், பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் பொது அமைப்புகளால் சந்தையை இடமாற்றக்கோரி முன்வைக்கப்பட்ட கடிதங்கள் தங்கள் தயவான பார்வைக்கு இத்துடன் இணைத்து அனுப்பிவைக்கப்படுகின்றன என்றுள்ளது
அதன் பிரதிகளை கௌரவ ஆளுநர், ஆளுநர் அலுவலகம், வடமாகாணம், செயலாளார் உள்ளூராட்சி அமைச்சு, வடமாகாணம், உள்ளூராட்சி உதவி ஆணையாளார், யாழ்ப்பாணம் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.