யாழ்ப்பாணத்தில் சாதி அமைப்பும், சமூக உறவுகளும் எனும் புத்தக வெளியீடு..!

யாழப்பாணம் பல்கலைக்கழக சமூகவியல்துறையின் ஏற்பாட்டில் எழுநா பதிப்பகத்தின்  யாழ்ப்பாணத்தில் சாதி அமைப்பும், சமூக உறவுகளும் எனும் கந்தையா சண்முகலிங்கம் அவர்கள் எழுதிய புத்தக வெளியீடு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமுக வியல்துறை தலைவர் கலாநிதி ச.சிறிகாந்தன் தலமையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட  மண்டபத்தில் 21.11.2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் இரண்டு நிமிட அக வணக்கத்துடன் ஆரம்பமானது.

அதனை தொடர்ந்து வரவேற்புரையை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகவியல் துறை மாணவி எம்.எச்.எவ் ஹனீபா நிகழ்த்தினார்.
தலமையுரையினை சமூகவியல் துறை தலைவர் கலாநிதி ச.சிறிகாந்தன்
நிகழ்த்தினார்.
Exif_JPEG_420

Exif_JPEG_420

அதனை தொடர்ந்து வெளியீட்டுரையினை சமூகவியல் துறை சிரேஸ்ர  விரிவுரையாளர்  இ.இராஜேஸ்கண்ணா நிகழ்த்தினார்.
மதிப்பீட்டுரைகளை  அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம், வடமராட்சி வடக்கு பிரதேச செயலக கலாசார மத்திய நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் ந.மயூரரூபன் ஆகியோர்  நிகழ்த்தினார்.
தொடர்ந்து கருத்துரையை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் கலைப்பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் நிகழ்த்தினார.
இதில் முதல்  பிரதியினை  ஆங்கில இலக்கியம்  மற்றும் மொழியியல் துறை முதலவர்
 மகேந்திரம் திருவரங்கம் கலைப்பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகவியல்துறை பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகவியல் துறை மாணவர்கள்,  சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 

 

Recommended For You

About the Author: Editor Elukainews