யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரசபையின் செயலாளரால் பருத்தித்துறை நகரசபை தவிசாளருக்கு எதிராக இன்று காலை முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவருவதாவது பருத்தித்துறை மரக்கறி வியாபாரிகள் பல்வேறு குறைபாடுகளை காராணம் காட்டி கடந்த வியாழக்கிழமை பருத்தித்துறை நவீன சந்தை கட்டிட தொகுதிக்கு வர்த்தகர்கள் தாமாகவே சென்றிருந்த நிலையில் தவிசாளர் தலமையில் ஏட்டு சபை உறுப்பினர்கள் அவர்களுடன் பேசியும் தாம் எக்காரண்த்தை கொண்டும் புதிய சந்தை தொகுதிக்கு செல்ல மாட்டோம் என்று தெரிவித்திருந்த நிலையில் தவிசாளர் தலமையில் கூடிய சபை உறுப்பினர்கள் நவீன சந்தை தொகுதியில் மரக்கறி சந்தையை மழை காலம் முடியும்வரை இயங்க வைப்பதென்று முடிவுசெய்திருந்த நிலையில் நேற்று முன்தினம் பன்னிரண்டு மணியுடன் மூடுவதாகவும் அங்கு வியாபாரம் செய்த 5. மரக்கறி வியாபாரிகளையும் முன்பிருந்த நவீன சந்தை தொகுதிக்கு செல்லுமாறு அறிவித்திருந்த நிலையில் அவர்கள் நேற்று வரை வெளியேறவில்லை. இதனால் தலைவர் எழுத்து மூலமான அறிவித்தலை புதிய சந்தை தொகுதியில் ஒட்டியதுடன் அவர்களை நவீன சந்தை தொகுதிக்கு செல்லுமாறு கூறிவிட்டு பூட்டு போட்டு பூட்டியிருந்த நிலையில் சபை செயலாளரால் பருத்தித்துறை போலீஸ் நிலைத்தில் தவிசாளருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோரை அழைத்த பருத்தித்துறை போலீஸார் குறித்த விடயம் தொடர்பாக தம்மால் முடிவெடுக்க முடியாது என்றும் இன்றும் நாளையும் நீதிமன்றம் விடுமுறை என்பதாலும் திங்கட்கிழமை வரை புதிய சந்தைப்பகுதியில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளை அனுமதிக்குமாறு கோரிய அடிப்படையில் திங்கட்கிழமை வரை புதிய சந்தை பகுதியில் வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்று பெய்த கடும் மழை காரணமாக புதிய சந்தை தொகுதிக்குள் வெள்ளம் புகுந்ததினால் அவர்கள் பருகுவதற்கு பயன்படுத்தும் குழாய் கிணற்றிற்குள் கழிவு நீர் புகுந்துள்ளதுடன் சந்தைக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது. பல்வேறு கழிவுகளும் அகற்றப்படாது காணப்படுகின்றன. இதேவேளை அங்கு விரைந்த பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி தலமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் ஆய்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர். பருத்தித்துறை புதிய சந்தைக்கு செல்லும் வீதி ஒடுங்கியதாகவும் ஒருவழி பாதையாகவும் காணப்படுவதால் போக்குவரத்து நெரிசல்களும் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. குறித்த சந்தையை நவீன சந்தை தொகுதிக்கு மாற்றுவது என்ற பெரும்பான்மை தீர்மானம் பருத்தித்துறை நகரசபையில் கடந்த ஏழாம்மாதம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே பருத்தித்துறை நகரசபை செயலாளரால் தற்காலிகமாக நவீன சந்தை தொகுதிக்கு மீண்டும் செல்வதை எதிர்த்து பருத்தித்துறை போலீஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் பருத்தித்துறை புதிய மரக்கறி சந்தையில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்ட 28 வியாபாரிகளில் 23 பேர் மீண்டும் நவீன சந்தை தொகுதிக்கு தாமாகவே சென்று வியாபாரம் மேற்கொண்டிருக்கின்றனர்.