கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் கடந்த பல வருடங்களாக கேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொதுமகன் போல் சென்று ஐஸ் போதை பொருளை பெற்றுக்கொண்ட சமயம் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகமிடமிருந்து 560 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் 1000 ருபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு திருட்டு சம்பவத்தில் பொலிசாரால் தேடப்பட்டு வந்த குறித்த 26 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் .
இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், கிளிநொச்சி நீதிமன்றிப் முட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.