அமைச்சர் நாமலின் ஆட்கள் என கூறி வீட்டுக்கு தீயிட்டு அட்டகாசம்! தொடர்ச்சியாக நடப்பதாக பொலிஸில் முறைப்பாடு.. |

கிளிநொச்சி A-9 வீதியில் நிதிமன்ற கட்டிடத்திற்கு அருகில் அரச காணியை சட்ட ரீதியாக நீண்டநாள் குத்தகையில் பெற்று வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றவரின் தற்காலிக வீடு முன்தினம் இரவு (19) தீக்கிரையாக்கப்பட்டுள்ளதோடு,  உடமைகளுக்கும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பாதிக்கப்பட்டவர்கள் நாமலின் ஆள் தான் எனக் கூறி... Read more »

சவப்பெட்டி தயாரிக்கும் இடத்திற்கு கீழ் பதுங்கு குழியில் கசிப்பு காய்ச்சி, சவப்பெட்டிக்குள் வைத்து வியாபாரம்! இளம் குடும்பஸ்த்தர் கைது.. |

சவப் பெட்டிக்குள் வைத்து கசிப்பு வியாபாரம் செய்துவந்த சவப்பெட்டி தயாரிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். பாணந்துறையில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, பல இடங்களுக்கு சவப்பெட்டிகளை விற்பனைக்கு கொண்டு செல்வதாக கூறி அதற்குள் கசிப்பு போத்தல்களையும் கொண்டு சென்றுள்ளார். இதுதொடர்பாக பொலிஸாருக்கு... Read more »

திடீர் மூச்சு திணறல்! யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிசு மரணம்.. |

மூச்சுத் திணறல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறந்து ஒன்றரை மாதங்களேயான சிசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.  புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைசேர்ந்த குறித்த சிசுவுக்கு நேற்றுமுன்தினம் மாலை திடீர் மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் புங்குடுதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில்... Read more »

யாழ்.எழுவைதீவு கடலில் மேலும் 14 இந்திய மீனவர்கள் கைது! 2 இழுவை படகுகள் கைப்பற்றப்பட்டது.. |

யாழ்.எழுவைதீவை அண்மித்த கடற்பகுதியில் மேலும் 14 இந்திய மீனவர்கள் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 2 இழுவை படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.  கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களையும் படகுடன் கைது செய்து மயிலட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அதன் பின்னர் யாழ்ப்பாண கடற்றொழில் நீரியல்வள துறை அதிகாரிகள் ஊடாக இந்திய... Read more »

தோட்டக் கிணற்றில் குதித்து குளிக்க சென்றிருந்த சிறுவனை காணவில்லை!

தோட்டக் கிணற்றில் குதித்து குளிக்க சென்ற 16 வயதான சிறுவன் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளான்.  குறித்த சம்பவம் வவுனியா – கொக்குவெளிப்பகுதியில் அமைந்துள்ள பாரிய தோட்டக்கிணற்றில் நீராடுவதற்காக சிறுவன் ஒருவர் நேற்று (20) குதித்துள்ளார். குறித்த சிறுவன் அந்தப்பகுதியில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்ததுடன், கிணத்தில் குளிக்க... Read more »

அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு என்ற போர்வையில் சர்வதேச நீதியைப் புறக்கணிக்க  தயாராகும் சுமந்திரன்…..! கருணாவதி பத்தமநாதன்.

அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு என்ற போர்வையில் சர்வதேச நீதியைப் புறக்கணிக்க சுமந்திரன் தயாராகுவதாக வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு பணிப்பாளர் திருமதி கருணாவதி பத்மநாதன் தெரிவித்துள்ளார். அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்... Read more »

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் தொடர்பில் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு! |

இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கடற்படையினால் கைதான இந்திய மீனவர்கள் 43 பேரையும் எதிர்வரும் 31ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது.  யாழ்ப்பாணம் – நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 43 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது... Read more »

பட்டத்தால் வந்த வினை தெய்வாதீனமாக உயிர் தப்பிய இளம் குடும்பஸ்தன்……..!

யாழ்பாணம் வடமராட்சி பருத்தித்துறை புலோலி கம்பாவத்தை கிராமத்தில் இளைஞர்கள் பலர் சேர்ந்து பட்டம் ஏற்றிக் கொண்டிருந்த வேளை பட்டம் இளைஞர்களின் கட்டுப்பாட்டிலிருந்து தவறியவேளை ஒரு இளைஞன் மட்டும் பட்டத்தின் கயிற்றை விடாது இருந்த நிலையில் சுமார் நாற்பது அடி உயரத்தில்  சுமார் ஐந்து நிமிடம்... Read more »

அனுமதிப்பத்திரத்திற்கு முரனாக மணல் அகழ்ந்த நால்வர் கைது….!

அனுமதிப்பத்திரத்திற்கு  முரனாக மணல் அகழ்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை வண்ணாத்தியாறு பகுதியில்  அனுமதிப்பத்திரத்திற்கு  முரனாக  மணல் ஏற்றியகுற்றச்சாட்டில் குறித்த நான்கு ஊழவியந்திரங்களும், அதன் சாரதிகள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய நேற்றையதினம் குறித்த... Read more »

இலவச சித்த ஆயுர்வேத மருத்துவமுகாம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. 

இலவச சித்தஆயுர்வேத மருத்துவமுகாம் நேற்று இடம்பெற்றுள்ளது. யாழ் இந்திய துணைத் துரகமும் மற்றும் வடமாகான சுதேச மருத்துவ திணைக்களம் இணைந்து சித்தமருத்துவ முகாமினை ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த இலவச மருத்துவ முகாம் பாரதிபுரத்தில் அமைந்துள்ள பாரதிவித்தியாலயத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் யாழ் இந்திய துணைத்தூதுவர்... Read more »