அமைச்சர் நாமலின் ஆட்கள் என கூறி வீட்டுக்கு தீயிட்டு அட்டகாசம்! தொடர்ச்சியாக நடப்பதாக பொலிஸில் முறைப்பாடு.. |

கிளிநொச்சி A-9 வீதியில் நிதிமன்ற கட்டிடத்திற்கு அருகில் அரச காணியை சட்ட ரீதியாக நீண்டநாள் குத்தகையில் பெற்று வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றவரின் தற்காலிக வீடு முன்தினம் இரவு (19) தீக்கிரையாக்கப்பட்டுள்ளதோடு,  உடமைகளுக்கும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பாதிக்கப்பட்டவர்கள் நாமலின் ஆள் தான் எனக் கூறி வந்த தர்மசிறி என்பவரே இவ்வாறு நடந்து கொண்டதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாக கூறியுள்ளனர்.

குறித்த காணியினை அபகரிக்கும் முயற்சியில் இதற்கு முன்னரும் பல தடவைகள் நாமலின் பெயரை பயன்படுத்தி எம்மை அச்சுறுத்தி தாக்கியுமுள்ளார். இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டும் உள்ளது. 

ஆனால் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுப்பதில் அக்கறையின்றி உள்ளனர் எனத் தெரிவித்த பாதிக்கப்பட்ட தரப்பினர் இச் சம்பவம் தொடர்பிலும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டனர்.

நாமல் ராஜபக்ஷவின் ஆட்கள் நாங்கள் என்று கூறிய தர்மசிறி என்ற நபர் நேற்று மாலை எமது இடத்திற்கு வருகைதந்து இந்த காணியில் எந்த அபிவிருத்தியும் செய்யக்கூடாது மீறி செய்தால்

வீட்டோடு அனைவரையும் தீயிட்டு கொளுத்தி விடுவேன் என்று அச்சுறுத்தினார்கள். நாமல் ராஜபக்ஷவின் ஆட்கள் நாங்கள் என்று கூறிய தர்மசிறி என்ற நபர் கடந்த முறையும் வீட்டில் உள்ளவர்களை கட்டி வைத்து அடித்து விட்டு

பொருட்களை சேதப்படுத்தியதோடு, துவக்குகளையும் காட்டி மிரட்டி சென்றுள்ளார்கள் இது தொடர்பாக பொலிஸில் முறைப்படு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews