குடும்பஸ்தர் ஒருர் மீது தாக்குதல் நடத்தி ரிக்ரொக்கில் காணொளி வெளியிட்டவர்களுக்கு விளக்கமறியல்!

குடும்பஸ்தர் ஒருவரை வாளால் வெட்டி அதன் வீடியோவை ஒளிப்பதிவு  பண்ணி சமூக வலைத்தளத்தில் ரிற்ரொக் பதிவிட்ட எட்டு பேரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை பதில் நீதவான் ந.ராஜீவன் இன்று (13) உத்தரவிட்டார். இச் சம்பவம் தொடர்பில் நெல்லியடிப்... Read more »

இந்திய இழுவை வலைப் படகுகள் ஏற்படுத்தும் அழிவுகளுக்கு நட்டஈடு ஈடாகாது – தடுத்து நிறுத்துமாறு அமைச்சர் டக்ளஸிற்கு சிலாபத்திலும் அழுத்தம்

இலங்கையின் கடல் வளங்களை அழிக்கும் வகையில் இந்தியக் கடற்றொழிலாளர்கள் இலங்கை கடலில் மேற்கொண்டு வருகின்ற சட்டவிரோதமான இழுவைமடி வலைத் தொழிலை முற்றாக கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், இழப்பீடுகள் எவையும் இந்தியப் படகுகளினால் ஏற்படுத்தப்படுகின்ற அழிவுகளுக்கு ஈடாக அமையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலாபத்திற்கான விஜயத்தினை... Read more »

கிழக்கு பல்கலைக்கழகத்தில் இரண்டாம் நாள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இரண்டாம் நாள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைவராத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல் கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தினால் இன்று மாலை பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியில் முன்னெடுக்கப்பட்டது. இதன்பொழுது உயிர்நீத்த உறவுகளுக்கு ஈகைசுடரேற்றி அகவணக்கம் செலுத்தியோடு மலரஞ்சலியும் கிழக்கு... Read more »

திருகோணமலையில் போராட்டத்தில் இணையுமாறு சுகாஷ் அழைப்பு!

திருகோணமலையில் போராட்டம் தொடர்கின்றது! சட்ட விரோதமாகப் புத்தர் சிலை வைப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்தார். திருகோணமலை போராட்டத்தில் இணையுமாறு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவ்... Read more »

ஆனைக்கோட்டையில் கசிப்புடன் இருவர் கைது!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் ஆனைக்கோட்டை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மானிப்பாய் பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 6.5... Read more »

யாழ். மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் வடக்கு கிழக்கு மாகாணம் தழுவியரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் கிழக்கு பல்கலைக்கழக கலைகலாசார பீட மாணவர் ஒன்றியத்துடன் இணைந்து மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் இன்றைய தினம் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. காலை எட்டுமணியளவில் கிழக்கு பல்கலைக்கழக முன்றலில்... Read more »

பதவிகளுக்காக விலை போகிறவர்களை ஆளுநராக்க வேண்டாம் – ஐக்கிய மக்கள் சக்தியின் ஒருங்கிணைப்பாளர் வேண்டுகோள்

ஜனநாயகத் தேர்தலை நிறுத்தி பதவிகளுக்காக விலை போனவர்களை வட மாகாண ஆளுநராக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வன்னியசிங்கம் பிரபாகரன் தெரிவித்தார்.  இன்றைய தினம் சனிக்கிழமை யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு... Read more »

மணிவண்ணனின் அலுவலகத்திற்கு முன்னால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் தமிழர் தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்றையதினம், முன்னாள் யாழ். மாநகர சபை முதல்வர் மணிவண்ணனின் அலுவலகத்திற்கு முன்னால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதன்போது பலரும்... Read more »

பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த இளம் கர்ப்பவதி பிரசவத்தின் பின்னர் பரிதாபமாக உயிரிழப்பு ..!

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பாட்டாளிபுரக் கிராமத்தைச் சேர்ந்த சாந்தி இராஜகோபால் என்கின்ற 24 வயதுடைய இளம் கர்ப்பிணித் தாயொருவர் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்களின் சீரானதும் நேர்த்தியானதுமான மருத்துவ சுகாதாரப் பராமரிப்புக்களின் பின்னர் நேற்று முன்தினம்... Read more »

யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவேந்தல்…..!

யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின்  இரண்டாம் நாள் நினைவேந்தல்  இன்று மதியம் யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுத்தூபியில், பல்கலைக்கழக மாணவர்களால் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. Read more »