
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் கட்சிகள் ஒருமித்து செயற்படும் வகையில் ஐக்கிய முன்னணி உருவாக்குவதற்கான முயற்சி சென்ற இரு வாரங்களுக்கு முன்னர் இடம் பெற்றது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் இது விடயத்தில் முன்னிலையில் நின்று செயற்பட்டார். தமிழரசுக் கட்சி, புளொட், ரெலோ,... Read more »

பூநகரி, பொன்னாவெளி பிரதேசத்தில் சிமெந்து தொழிற்சாலை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த தொழிற்சாலையினால் சுற்றுச் சூழலுக்கும் பிரதேச மக்களுக்கும் ஏற்படக்கூடிய சாதக பாதகங்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்றது. கடற்றொழில் அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் இடம்பெற்ற... Read more »

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் இயங்கி வரும் சிறுவர் இல்லத்தில் இருந்து மூன்று சிறுமிகள் காணாமல் போன நிலையில் அவர்கள் கோப்பாய் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டனர். காணாமல் போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுமிகள் 14, 15 மற்றும் 16 வயதுடையவர்கள் ஆவர்.... Read more »

கறைபடியாத தமிழர் வரலாற்றுக்குள் பௌத்தத்தை திணிக்காதீர் – நெடுந்தீவு வெடியரசன் கோட்டை விவகாரத்தில் அங்கஜன் இராமநாதன் கண்டனம். தமிழர்களுடைய வரலாற்றை திரிவுபடுத்தி அதனூடாக மேற்கொள்ளப்படவுள்ள பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளை உரிய அதிகாரிகள் உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டுமென யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்... Read more »

இராவணேஸ்வரனுடன் தொடர்புடைய கன்னியா வெந்நீர் ஊற்றுக்களை பௌத்த மதத்தோடு இணைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். அவரது உத்தியோகபூர்வ சமூக ஊடகம் ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்தார். அதில் மேலும் உள்ளதாவது, இதிகாசங்களில் திருகோணமலை கன்னியா ஏழு வெந்நீர் ஊற்றுகளை... Read more »

“பேருந்துகள் ஏற்றாது செல்வதனால் வீதியில் அந்தரிக்கும் மாணவர்கள் ” எனும் சூலைப்பில் பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயமானது 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு... Read more »

நீதிபதிகளின் சம்பளத்துக்கு அறிவிடப்படும் வரியை இரத்துச் செய்யுமாறு உத்தரவை பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு ரிட் மனுக்களை, ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அதுவரை, நீதிபதிகளின் சம்பளத்திலிருந்து... Read more »

பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை காணவில்லை என தாயார் கண்னீர் விட்டு கதறியழும் காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு போர் காரணமாக தனது மகன் பிரான்ஸ் சென்று 10 வருடங்களான நிலையில் தற்போது காணாமல்போயுள்ளதாக கூறப்படுகின்றது. கணவரை இழந்த... Read more »

மக்களின் வாழ்க்கையை நாசமாக்க வேண்டும் என்பதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சதித் திட்டம் என ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (15.03.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “ஜனாதிபதி பதவி... Read more »

சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட டீசல் இன்று அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. புத்தூர் கமநல சேவை பிரிவின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஆறு லிட்டர் டீசல் விகிதம் வழங்கப்பட்டன. இதன்போது 630 விவசாயிகளுக்கு டீசல் வழங்கப்படுகின்றன. வழங்கப்பட்ட... Read more »