தென்னிந்திய திரைப்பட பின்னணிப் பாடகி யாழில் கலந்துகொள்ளவுள்ள நிகழ்வு

காரைநகர் மணற்காடு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய 6ம் திருவிழா உபய காரர்களின் ஏற்பாட்டில் 12.03.2023 ஞாயிற்றுக்கிழமை இரவு 8மணிக்கு தென்னிந்திய திரைப்படப் பின்னணிப் பாடகி நித்யஶ்ரீ மகாதேவனும் அவரது புத்திரியும், அவரது சொந்த பக்கவாத்தியக்கலைஞர்களுடன் வழங்கும் மாபெரும் இன்னிசை நிகழ்வு இடம்பெறவுள்ளதாக திருவிழா உபயகாரர்களான... Read more »

ரூபாவின் பெறுமதியில் தொடர் உயர்வினால் தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து இலங்கை ரூபாய் வலுவடைந்து வருவதால் தங்கத்தின் விலை வெகுவாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை தங்க ஆபரண  வர்த்தக சங்கத்தின் பொருளாளர் ராமன் பாலசுப்ரமணியம் இது குறித்து விபரித்துள்ளார். இதற்கமைய, கொழும்பு – செட்டியார் தெருவில் 04ஆம் திகதி சனிக்கிழமை 24... Read more »

இலங்கைக்கெதிராக இத்தாலியில் ஆர்ப்பாட்டம்!

இத்தாலியின் மிலானோ நகரில் இலங்கையர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில், உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களும் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »

ஒரு சிப்பாய் கண்ட கனவு – ஆய்வாளர் நிலாந்தன்

புத்த பகவான் ராஜபோகங்களையும் குடும்பத்தையும் துறந்து சன்னியாசி ஆகியவர்.ஆனால் அவர் இலங்கைத் தீவில் நிலாவரையில் ராணுவ முகாமில் உள்ள ஒரு சிப்பாயின் கனவில் தோன்றி தனது சிலையை நிலாவரையில் வைக்குமாறு கூறியதாக அந்த சிப்பாய் கடந்தகிழமை கூறியுள்ளார். ரவூப் ஹக்கீம் முன்பொருமுறை கூறியது போல... Read more »

கொட்டகலை நகரில் திடீர் தீ பரவல்: இரண்டு கடைகள் எரிந்து சேதம்

நுவரெலியா கொட்டகலை நகர பகுதியில் நேற்று இரவு 09.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தளபாட கடை தொகுதியும், வீடும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் பசார் பகுதியில்... Read more »

மட்டு மயிலந்தனையில் சிங்கள மயப்படுத்தல் மதுறு ஓயா திட்டம் நிறுத்தவேண்டும் அல்லது நிதி வழங்கிய சர்வதேச நிறுவன அலுவலகம் முற்றுகையிடப்படும்— தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொ.கஜேந்திரகுமார் எச்சரிக்கை

மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லைப் பகுதியான தமிழ் மக்களுக்கு சொந்தமான மயிலந்தனைமடு மாதந்தனை  மேச்சல்தரை பகுதியில் சிங்கள மயப்படுத்தலுக்காக திட்டமிடப்பட்ட மதுறு ஓயா வலதுகரை திட்டத்திற்கு தமிழ் பிரதேசத்தின் ஒரு அங்குலம்  நிலம் கூட வழங்க முடியாது என்பதுடன் நிதி உதவி வழங்குகின்ற சர்வதேச நிறுவனங்கள்... Read more »

யாழ்.மாநகர சபையின் புதிய முதல்வர் வேட்பாளராக தமிழரசு கட்சி சார்பில் சொலமன் சிறில்… |

யாழ்.மாநகரசபையின் புதிய முதல்வர் தொிவில் தமிழரசு கட்சிசார்பில் சொலமன் சிறிலை வேட்பாளராக நிறுத்த கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தொிவித்துள்ளார். இன்றையதினம் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில்... Read more »

யாழ்.அச்சுவேலி நகரில் இளைஞன் மீது துரத்தி.. துரத்தி.. வாள்வெட்டு!

யாழ்.அச்சுவேலி – மகிழடி வைரவர் கோவில் பகுதியில் இன்று மாலை இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு குழு ஒன்று துரத்தி.. துரத்தி.. வாள்வெட்டு நடத்தியுள்ளது. இரு குழுக்களுக்கிடையில் தொடர்ச்சியாக முறுகல் நிலை இருந்துவருவதாக அச்சுவேலி பொலிஸார்கூறுகின்றனர். இந்நிலையில் ஒரு குழுவை சேர்ந்த இளைஞன் அச்சுவேலி... Read more »

பாலைதீவில் – பாரிய நீர் வேளாண்மை திட்டம்! நோில் சென்று பார்வையிட்ட அமைச்சர்… |

பூநகரி – பாலைதீவில் நீர் வேளாண்மைக்குப் பொருத்தமான இடங்கள் அடையாளப் படுத்தப்பட்டிருக்கும் நிலையில் குறித்த பகுதிக்கான கள விஜயத்தை அதிகாரிகள் சகிதம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (05.03.2023) மேற்கொண்டார். குறித்த விஜயத்தின்போது, பாலைதீவு அந்தோனியார் ஆலய த்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட அமைச்சர்... Read more »

யாழ்.கச்சதீவில் தமிழக பெண் ஒருவர் உட்பட இரு பெண்களின் சங்கிலிகளை அறுத்த நபர் கைது!

யாழ். கச்சதீவு திருவிழாவில் தமிழக பக்தர் ஒருவர் உட்பட இரு பக்தர்களின் சங்கிலியை அறுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 14ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை பதில் நீதிவான் சாளினி ஜெயபாலச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.  கச்சதீவு திருவிழாவில் கலந்து கொண்ட தமிழகத்தை... Read more »