பாலைதீவில் – பாரிய நீர் வேளாண்மை திட்டம்! நோில் சென்று பார்வையிட்ட அமைச்சர்… |

பூநகரி – பாலைதீவில் நீர் வேளாண்மைக்குப் பொருத்தமான இடங்கள் அடையாளப் படுத்தப்பட்டிருக்கும் நிலையில் குறித்த பகுதிக்கான கள விஜயத்தை அதிகாரிகள் சகிதம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (05.03.2023) மேற்கொண்டார்.

குறித்த விஜயத்தின்போது, பாலைதீவு அந்தோனியார் ஆலய த்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆலயத்தின் செயற்பாடுகள் மற்றும் எதிர்வரும் 08ஆம் திகதி (புதன்கிழமை) பாலைதீவு அந்தோனியார் ஆலயத்தில் ஆரம்பமாகவுள்ள கொடியேற்றத் திருவிழா ஏற்பாடுகள் தொடர்பாக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

மேலும் ஆலய புனரமைப்பு பணிகளுக்கு நிதியுதவி வழங்கவும் உறுதியளித்துள்ளார். நீர்வேளாண்மை உற்பத்திகளான கடலட்டை மற்றும் கடல்பாசி வளர்ப்பு போன்றவற்றை பாலைதீவை அண்டிய பகுதிகளில் ஆய்வு ரீதியாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில், தனியார் முதலீட்டாளர்களின் ஒத்துழைப்புடனும், 

பாலைதீவை அண்மித்த பிரதேச மக்களின் பங்களிப்புடனும் மேற்கொள்வது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடினார்.

மேலும், கடற்றொழிலாளர்களுக்கு மேலதிக வாழ்வாதாரத்தை வழங்கக்கூடிய, குறித்த உற்பத்திகளை மேற்கொள்கின்ற தரப்புகள், கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை பிரதேசத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்பதுடன் 

பாலைதீவு அந்தோனியார் ஆலய புனரமைப்பு மற்றும் திருவிழா கால செலவீனங்களுக்கும் பங்களிப்பு செய்ய வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews