உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு ஏப்ரல் இடம்பெறலாம் – சன்ன ஜயசுமன

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 07 அல்லது 08 ஆம் திகதிகளில் இடம்பெறும் என எதிர்பார்க்கிறோம். நாட்டு மக்களின் அடிப்படை வாக்குரிமையை உயர்நீதிமன்றம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். களுத்துறை பகுதியில்... Read more »

பளை இத்தாவில் பகுதியில் வெடி பொருட்கள் மீட்பு!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் வீடு ஒன்றின் முற்றத்தில் பச்சை நிற சீருடை துணி ஒன்றினை வீட்டு உரிமையாளர் அவதானித்துள்ளார். இதனையடுத்து குறித்த இடத்தில் வீட்டு உரிமையாளரால் தோண்டப்பட்ட போது வெடிபொருட்கள் இருப்பதை அவதானித்தனர் உடனடியாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை... Read more »

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் நிதி அமைச்சின் அறிவிப்பு

உள்ளூராட்சி தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தடுத்து வைத்துள்ளமையை தவிர்க்குமாறு நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பை தாம் மதிப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிடிய தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நீதிமன்ற தீர்ப்பை ஒவ்வொருவரும் மதிக்க வேண்டும். அது அனைவரினதும்... Read more »

நாட்டு மக்கள் மிகவும் நெருக்கடியான சூழலிலேயே வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர் – சமித் விஜேசுந்தர

அரசியல்வாதிகள் கருத்துரைப்பதற்கு முன்பாக பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களின் சமயலறைக்கு முதலில் சென்று சமயலறையில் நிலைமையை அவதானித்துவிட்டு கருத்துரைக்க வேண்டும் என்று, ஐக்கிய இளைஞர் சக்தியின் தேசிய அமைப்பாளர் சமித் விஜேசுந்தர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.... Read more »

க.பொ.த உயர்தர பரீட்சார்த்திகளுக்கு பாரிய அநீதி:இலங்கை ஆசிரியர் சங்கம்!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தாமதமாவதால், பரீட்சார்த்திகள் பாரிய அநீதிக்கு உள்ளாகி வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சர் முன்மொழிந்த கொடுப்பனவுகளில் இருந்து ஆயிரம் ரூபாவைக் குறைக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்... Read more »

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு விரைவில் சுமுகமான தீர்வு!

இலங்கை இந்திய மீனவர்களிடையே நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் இழுவை மடிப் படகுகளின் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை கச்சதீவில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று இடம்பெற்றது. இதன்போது இந்தியாவிலிருந்து வருகை தந்த மீனவப் பிரதிநிகள், கட்சிசார் பிரதிநிகள் மற்றும் அமைச்சர் உட்பட பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டோருக்கு பொன்னாடை... Read more »

16ஆவது நிலக்கரி கப்பல் நாளை இலங்கை வருகிறது

மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை தடையின்றி இலங்கைக்குக் கொண்டு வரப்படும் என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்களும் இலங்கையில் பங்குகளைப் பெற்றுள்ளதாக அதன் பொது முகாமையாளர் நாமல் ஹேவகே குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நிலக்கரி... Read more »

மட்டக்களப்பில் தலைமறைவாகி வந்த வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் கஞ்சாவுடன் கைது !

மட்டக்களப்பு வீடு ஒன்றில் புகுந்து வாள்வெட்டு  தாக்குதல் மேற்கொண்டு தலைமறைவாகி வந்த இளைஞன் ஒருவரை 950 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் நேற்று வெள்ளிக்கிழமை (3) மாலை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். கடந்த வருடம் நவம்பர் மாதம் 12 ம் திகதி கருவப்பங்கேணியிலுள்ள... Read more »

முச்சக்கரவண்டியும் உழவு இயந்திரமும் மோதி கோர விபத்து – பெண் உயிரிழப்பு

அம்பாறை மாவட்டம் காரைதீவு காவல் பிரிவிற்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி காரைதீவு சண்முக வித்தியாலயத்திற்கு முன்னால் நேற்று (03) முச்சக்கரவண்டியும் உழவு இயந்திரமும் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன் முச்சக்கரவண்டியில் பயணம்... Read more »

சிங்கப்பூரில் உலக சம்பியன்ஷிப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இலங்கை பெண்

சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச உடற்கட்டமைப்பு உலக சம்பியன்ஷிப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி முழுப் போட்டியிலும் சிறந்த வீராங்கனைக்கான கோப்பையையும், தங்கப்பதக்கத்தையும் ஹாஷினி ஹெவேகே வென்றுள்ளார். மொரட்டுவையில் வசிக்கும் ஹாஷினி ஹேவகே, டுபாயில் கணக்காளராகப் பணிபுரிந்து வரும் நிலையில், சிங்கப்பூரில் நடைபெற்ற வருடாந்திர உடற்கட்டமைப்பு உலக சாம்பியன்ஷிப்பில்... Read more »