நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான காரைக்கால் திண்ம கழிவுகள் சேகரிப்பு நிலையம் தீப்பற்றி தற்போது மாநகர சபை மற்றும் ஏனைய பிரதேச சபைகளின் பங்களிப்புடன் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. Read more »
கோட்டாபய ராஜபக்சவின் வருகையை கண்டித்து மாலைதீவில் வாழும் சிறிலங்காவைச் சேர்ந்தோர் போராட்டம் ஒன்றை தொடங்கியுள்ளனர். மாலைதீவின் தலைநகரான மாலேயில் சிறிலங்காவைச் சேர்ந்தோர் எவ்வாறு போராட்டம் நடத்துகின்றனர் என்பதை சமூக வலைத்தள பயனனாளி ஒருவர் வெளியிட்ட காணொலி வாயிலாக அறிய முடிகின்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறிலங்கா கொடி... Read more »
தற்போதைய நெருக்கடிநிலையில் தமிழ்மக்களின் பிரச்சினைக்கான தீர்வினை முன்வைபப்தற்கு அனைத்து நாடாளுமன்றப் பிரதிநிதிகளும் ஒன்று கூடி தீர்க்கமான முடிவெடுக்க வாருங்கள் என மதத்தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே சமயத்தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தினர். இதுதொடர்பில் அவர்கள் மேலும்... Read more »
அரச ஊடகமான தேசிய ரூபவாஹினியின் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. பெருந்திரளானோர் கூடி தேசிய ரூபவாஹினிக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது அப் பகுதியில் பதற்றமான சூழலும் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது . அரச ஊடகமான தேசிய ரூபவாஹினியின் கலையகத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து கலையகத்தினை முற்றுகையிட்டுள்ளதுடன்,... Read more »
கொழும்பு – பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலக பகுதியில் சற்றுமுன் ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் இராணுவ வீரரொருவர் காயமடைந்துள்ளார். அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தொடர்ச்சியாக கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், வானை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளதாக. செய்திகள் தெரிவிக்கின்றன. Read more »
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியின் கடமைகளை பொறுப்பேற்றுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, பதில் ஜனாதிபதியாக நியமித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனக்கு அறிவித்துள்ளார்... Read more »
காலி மாவட்டம் ஊருகஸ்மந்திய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று ஊருகஸ்மந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஊரகஸ்மங்ஹந்திய, கோரகின பிரதேசத்தை சேர்ந்த... Read more »
கோட்டா கோ கம பகுதியில் இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு 15, வெல்லம்பிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 15, 17 மற்றம் 20 வயதுகளையுடைய இளைஞர்கள் நால்வரே காயமடைந்த... Read more »
யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெரும் தட்டுப்பாடு நிலவும் லிற்ரோ எரிவாயு இன்று 1000 சிலிண்டர்கள் எடுத்து வரப்படுகின்றது. இதேநேரம் இன்றைய தினம் ஆயிரம் சிலிண்டர்கள் எடுத்து வரப்படும் நிலையில் நாளை மறுதினம் 2 ஆயிரம் சிலிண்டர்கள் எடுத்து வரப்படவுள்ளதோடு எதிர்வரும் வாரமும் அதிக சிலிண்டர்கள் எடுத்து... Read more »
கொழும்பு, ப்ளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக, பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்போரை கலைப்பதற்காக, பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு வீதியுள்ளார். அத்துடன் நீர்த்தாரை பிரயோகத்தையும் மேற்கொண்டுள்ளனர். Read more »