மேல் மாகாணத்தில் ஊரடங்கு! நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டம் –

மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அத்துடன் நாடு முழுவதும் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு, வன்முறையை தூண்டும் வகையில் சட்டம் ஒழுங்கை மீறுவோரை கைதுசெய்ய படையினர் மற்றும்... Read more »

கோட்டபாய ராஜபக்ஜ மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் வெளியேறினார்.

அதிகாரங்கள், சட்டங்களுக்கு உட்பட்டு விமானம் வழங்கப்பட்டது: விமானப்படை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தனது மனைவி அயோமா ராஜபக்‌ஷ மற்றும் 2 பாதுகாவலர்களுடன் விமானப்படை விமானத்தில் இன்று (13) அதிகாலை நாட்டை விட்டுச் சென்றுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, மாலைதீவின் மாலி நகருக்கு செல்வதற்காக ... Read more »

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்ப்பட்ட 15 பேர் கைது….!

மட்டக்களப்பு மவட்டம் களுவாஞ்சிக் குடியில் வெளி நாட்டுக்குச் செல்ல தயாரான 15 பேர்  விஷேட அதிரடி படையினரால் நேற்று 12/07 கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் வடமராட்சி பருத்தித்துறை இன்பசிடி, அல்வாய் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். Read more »

அமைச்சரவை கூடததால் பொருளாதாரம் முடங்கும் நிலை –

அமைச்சரவை கூடாத காரணத்தினால் எரிபொருள் உள்ளிட்ட அவசரகால கொள்வனவுகளுக்கு பணத்தை ஒதுக்க முடியாமல் பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. திங்கட்கிழமை (11) நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி பங்கேற்காத காரணத்தினால் காலவரையறையின்றி பிற்போடப்பட்டமையினால் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கட்சித்... Read more »

பசில் ராஜபக்சவும் இலங்கையிலிருந்து வெளியேறினார் –

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 24 மணித்தியாலங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போது பசில் ராஜபக்ச அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள மக்கள்... Read more »

இலங்கை வரலாற்றில் பதவிக்காலம் முடிவதற்குள் தப்பி ஓடிய முதலாவது ஜனாதிபதி…..!

இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான கோட்டபாய ராஜபக்ஜ  இன்றைய தினம் தனது பதவியில் இருந்து விலகவுள்ளார். அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச தனது பதவிக்காலம் முடிவதற்குள்  பதவியில் இருந்து விலகும் முதலாவது  ஜனாதிபதியாகவும் இடம் பிடித்துள்ளார்.... Read more »

பாண் விலை இன்று நள்ளிரவு தொடக்கம் உயர்வு..!

நாடு முழுவதும் இன்று நள்ளிரவு தொடக்கம் பாண் விலை 20 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளது. இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. அத்தோடு ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. Read more »

நிறுத்தாமல் சென்ற பேருந்தின் கண்ணாடியை கல்லால் எறிந்து உடைத்த இளம்பெண் கைது!

பேருந்தில் ஏறுவதற்க்கு கைகாட்டி மறித்தபோது   இ.போ.ச பேருந்து நிறுத்தாமல் சென்றதால் கோபமடைந்த பெண் பேருந்து மீது  கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளாள். குறித்த சம்பவம் புளியங்குளம் பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்லலது. குறித்த  சம்பம் தொடர்பில்  மேலும் தொியவருவதாவது, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தை... Read more »

நாட்டை விட்டு வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ச –

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று இலங்கை அதிகாரிகள் AFPக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. AFP செய்தி முகவரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளது. கொழும்பில் இருந்து அதிகாலையில் கோட்டாபய ராஜபக்சவை ஏற்றிச் செல்லும் இராணுவ விமானம் புறப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகளுக்கு மத்தியில் இந்த தகவல்கள்... Read more »

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளிற்கு மட்டுப்படுத்தப்பட்ட பசளை – மாவட்ட அரசாங்க அதிபரிடம் முறையீடு…..!

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளிற்கு மட்டுப்படுத்தப்பட்ட பசளை கிடைத்துள்ளமை தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரனிடம் விவசாயிகள் முறையிட்டுள்ளனர். இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரை இரணைமடு விவசாய சம்மேளத்தினர் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். கிளிநொச்சி மாவட்டத்திற்கு 40 அந்தர் உரம்... Read more »