கனடாவில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழர் ஒருவர் பரிதாபமாக பலி!

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் யாழ்ப்பாணம் புங்குடுதீவை பிறப்பிடமாக கொண்ட தமிழர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.   Read more »

லிட்ரோ கேஸ் நிறுவனம் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

சவர்க்கார நீர் போன்ற முறைகளைப் பயன்படுத்தி வீட்டில் உள்ள எரிவாயு சிலிண்டர்களை சோதனை செய்ய வேண்டாம் என லிட்ரோ கேஸ் லங்கா லிமிட்டெட் நிறுவனம் நுகர்வோரை எச்சரித்துள்ளது. அண்மை காலமாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.... Read more »

சில கணனி, அலைபேசி விளையாட்டுக்களுக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை.

சில வகை கணனி மற்றும் அலைபேசி ஒளித்தோற்ற விளையாட்டுகளுக்கு (Video Games) தடை விதிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இந்தக் கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார். சில வகை ஒளித்தோற்ற விளையாட்டுக்களை கணனி அல்லது அலைபேசி... Read more »

பெண்கள் மீது மிக கொடூரமாக தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்!

டெல்லியில் அடையாளம் தெரியாத நபர்களால் பெண்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தில் சிசிடிவி காணொளிகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் காணொளிகளை அடிப்படையாக கொண்டு குற்றவாளிகளை பொலிஸார் தேடி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 19ம் திகதி டெல்லியில் உள்ள... Read more »

விடுதலை புலிகளின் தங்கத்தை தேடிய விவகாரம், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர் பதவி இழந்தார்..!

விடுதலை புலிகளால் மறைத்துவைக்கப்பட்டதாக கருதப்படும் தங்கத்தை தேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைப்பு செயலாளர் தொடர்பில் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக வௌியான செய்திகள் தொடர்பில் விசேட விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட... Read more »

வடக்கில் பாடசாலை மாணவர்கள் 12 பேருக்கும் பெற்றோர் 3 பேருக்கும் கொரோனா தொற்று..!

வடக்கில் பாடசாலை மாணவர்கள் 12 பேருக்கும் பெற்றோர் 3 பேருக்கும் கொரோனா தொற்று..! தலைமன்னார் துறை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் 12 பேர் உட்பட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரி.வினோதன்... Read more »

வடமாகாண மக்களின் தொழில்துறை மேம்பாட்டுக்கு ஜேர்மன் வழங்கும் உதவிகள் அதிகரிக்கப்படும்..!ஜேர்மன் துதுவர் ஹோல்டர் ஸுபேட்

வடமாகாணத்தில் தொழில்துறைஅபிவிருத்தியில் ஜேர்மன் அரசாங்கத்தின் பங்களிப்பு தொடர்ந்தும் அதிகரிக்கப்படும்.என ஜேர்மன் துதுவர் ஹோல்டர் ஸுபேட் தெரிவித்தார். நேற்றைய தினம் புதன்கிழமை சுன்னாகத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற யாழ்.மாவட்ட வர்த்தக தொழில்துறை மன்றத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு... Read more »

யாழ். கொடிகாமம் – இராமாவில் பகுதியில் கோவிலை உடைத்து கொள்ளை! நகை மற்றும் பொருட்களுடன் சந்தேகநபர் கைது… |

யாழ்.கொடிகாமம்- இராமாவில் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் பள்ளியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நகை மற்றும் ஆலய பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.இராமாவில் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் கடந்த 21ஆம் திகதி 4 லட்சம் ரூபாய்... Read more »

வடக்கில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா..!  49 மரணங்கள் பதிவு.. | 

வடக்கில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா..! நவம்பர் மாதத்தில் உச்சம் தொட்டது, 49 மரணங்கள் பதிவு.. வடமாகாணத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 3049 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 49 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக மாகாண சுகாதார திணைக்கள புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.... Read more »

யாழ்.மாதகலில் மக்களின் வீடுகளுக்குள் நுழைந்தும் கடற்படையினர் அச்சுறுத்தல்!

யாழ்.குசுமந்துறை பகுதியில் கடற்படையின் தேவைக்காக காணி சுவீகரிக்கப்படுவதை எதிர்த்து நேற்று காலை போராட்டம் நடத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றய தினம் மாலை மக்களுடைய வீடுகளுக்குள் நுழைந்த கடற்படையினர் காணி தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர். குறித்த தகவலை அப்பகுதி மக்கள் கூறியுள்ளதுடன், கடற்படையினரின் இத்தகைய அத்துமீறிய செயற்பாடு... Read more »