வவுனியா மாவட்டத்தில் இம்முறை 3051 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.35 பரீட்சை மத்திய நிலையங்களும், 14 இணைப்புக்காரியாலங்களும் அமைக்கப்பட்டு பரீட்சை இடம்பெறுகின்றது. மாணவர்கள் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டு, பெற்றோரிடம் ஆசிபெற்று பரீட்சைக்கு சென்றதை அவதானிக்க முடிந்தது. Read more »
12 வது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை இன்றையதின யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த சந்தை எதிர்வரும் 23ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதற்கு யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து எல்.ஈ.சி.எஸ் (LECS) நிகழ்வை... Read more »
கனடாவில் வசித்து வந்த நிலையில் காணாமல் போன தமிழ் யுவதி ஒருவரை கண்டுபிடிப்பதற்கு டொராண்டோ பொலிஸார் அங்குள்ள பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 28 வயதான பிரசாந்தி அர்ச்சுனன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதியை இறுதியாக கடந்த 16 ஆம் திகதி... Read more »
யாழ்.சுன்னாகம் நகர் பகுதியில் 4 இடங்களில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டுவந்த 3 சந்தேகநபர்கள் மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் 2 பேர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் நடாத்திய விசாரணைகளின்போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட... Read more »
வீட்டு வளாகத்தில் பொதியிடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 85 கிலோ கேரள கஞ்சா யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கணவன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் சுழிபுரம் பறாளை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இடம்பெற்றுள்ளது. மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ்... Read more »
யாழ் போதனா வைத்தியசாலையில் 7 பேர் உட்பட வடக்கில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வு கூடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடம் என்பவற்றில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம்... Read more »
இலங்கையில் நாளொன்றுக்கு 4 மணித்தியாலங்கள் மின்வெட்டு ஆமுலாகலாம் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கூறியுள்ளார். சில மாதங்களுக்குள் அமெரிக்க டொலர் கடனைப் பெற இலங்கை தவறினால், சுமார் 04 மணித்தியாலங்கள் மின்வெட்டுக்கு வாய்ப்புள்ளதாக அவர் எச்சரித்துள்ளார். இந்த விடயத்தில் தேவையான தியாகங்களை செய்வதற்கு... Read more »
இலங்கை கடல் எல்லைக்குள் தொடரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழ்.காரைநகர் பிரதேச கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கம் மற்றும் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்களின் சம்மேளனம் ஆகியன இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை முன்னெடுத்துள்ளனர். காரைநகர் பிரதேச சபையின் முன்பாக இன்றைய... Read more »
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் 20.01.2022 நேற்று நள்ளிரவு 11.50 மணியலவில் தாயும் 17 வயது மகளும் தீயில் எரிந்து உருக்குலைந்த நிலையில் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவயிடத்திற்கு... Read more »